Homeசெய்திகள்தமிழ்நாடுபூங்கொத்துகள், பொன்னாடைகளுக்குப் பதிலாக புத்தகங்கள்! இதுவரை 7.10 லட்சம் நூல்கள் வழங்கப்பட்டுள்ளன – மு.க.ஸ்டாலின்

பூங்கொத்துகள், பொன்னாடைகளுக்குப் பதிலாக புத்தகங்கள்! இதுவரை 7.10 லட்சம் நூல்கள் வழங்கப்பட்டுள்ளன – மு.க.ஸ்டாலின்

-

- Advertisement -

பூங்கொத்துகள் மற்றும் பொன்னாடைகளுக்குப் பதிலாக புத்தகங்களைப் பரிசாக வழங்குமாறு விடுத்த வேண்டுகோளை ஏற்று பொதுமக்கள் வழங்கிய நூல்களில் இதுவரை 7.10 லட்சம் புத்தகங்கள் நூலகங்களுக்கும் படிப்பகங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.பூங்கொத்துகள், பொன்னாடைகளுக்குப் பதிலாக புத்தகங்கள்! இதுவரை 7.10 லட்சம் நூல்கள் வழங்கப்பட்டுள்ளன – மு.க.ஸ்டாலின்

இதன் தொடர்ச்சியாக இன்று ஒரே நாளில் மூன்று கல்வி நிறுவனங்கள் மற்றும் நூலகங்களுக்கு மொத்தம் 10,000 புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

we-r-hiring

அதன்படி, பாளையங்கோட்டை தூய சவேரியார் தன்னாட்சிக் கல்லூரி நூலகத்திற்கு 5,000 புத்தகங்களும், வாசுதேவநல்லூர் ரஹ்மானின் கல்விக்கூடம் வாட்பயிற்சி மையத்திற்கு 3,000 புத்தகங்களும், செங்கம் வட்ட அரசு கலைக் கல்லூரி நூலகத்திற்கு 2,000 புத்தகங்களும் வழங்கப்பட்டுள்ளன.

புத்தகங்களைப் பரிசாக வழங்குமாறு விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட நூல்கள் தொடர்ந்து பல்வேறு நூலகங்களுக்கும் படிப்பகங்களுக்கும் வழங்கப்பட்டு வருகின்றன.

இதுவரை 7.10 லட்சம் நூல்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், அதன் தொடர்ச்சியாக தற்போது மேலும் 10,000 புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அன்பில் மகேஷுக்கு ஜாமீன் வழங்க காவல்துறை கடும் எதிர்ப்பு – வரும் 10-ம் தேதி தீர்ப்பு

MUST READ