spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாதனுஷ் நடிக்கும் 'D52' படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!

தனுஷ் நடிக்கும் ‘D52’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!

-

- Advertisement -

தனுஷின் D52 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.தனுஷ் நடிக்கும் 'D52' படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!

நடிகர் தனுஷ் கடைசியாக ராயன் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தினை தனுஷே இயக்கியும் இருந்தார். தனுஷின் ஐம்பதாவது படமாக உருவாகியிருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிக பெரிய வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து நடிகர் தனுஷ், சேகர் கம்முலா இயக்கத்தில் தனது 51வது திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படத்திற்கு குபேரா என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மும்பை தாராவியை மையமாக வைத்து இந்த படம் உருவாகி வருகிறது. விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் தனுஷ் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படத்தையும் இயக்கி முடித்துள்ளார். அடுத்ததாக தனுஷ் தனது 52வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திலும் நடிகர் தனுஷ் தான் இயக்குகிறார். படத்தில் தனுஷ் உடன் இணைந்து அருண் விஜய், அசோக் செல்வன், நித்யா மேனன், ஷாலினி பாண்டே, சத்யராஜ், ராஜ்கிரண் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதாக சொல்லப்படுகிறது.தனுஷ் நடிக்கும் 'D52' படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட படக்குழு! சமீபத்தில் தான் இந்த படத்தின் படப்பிடிப்பு தேனி பகுதியில் தொடங்கப்பட்டு மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் D52 படத்தின் தயாரிப்பு நிறுவனமான டான் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் அறிக்கை ஒன்றினை வெளியிட்டு D52 படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்கள் இனிவரும் நாட்களில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.

MUST READ