Homeசெய்திகள்சினிமாமீண்டும் இணைந்த செல்வராகவன் - ஜி.வி. பிரகாஷ் காம்போ.... இரண்டாம் பாகமா? அல்லது புதிய படமா?

மீண்டும் இணைந்த செல்வராகவன் – ஜி.வி. பிரகாஷ் காம்போ…. இரண்டாம் பாகமா? அல்லது புதிய படமா?

-

- Advertisement -

செல்வராகவன் மற்றும் ஜி.வி. பிரகாஷ் ஆகியோரின் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.மீண்டும் இணைந்த செல்வராகவன் - ஜி.வி. பிரகாஷ் காம்போ.... இரண்டாம் பாகமா? அல்லது புதிய படமா?

செல்வராகவன், நடிகர் தனுஷின் உடன்பிறந்த சகோதரர் என்பது அனைவரும் அறிந்ததே. ஆரம்பத்தில் தனுஷை திரைத்துறையில் அறிமுகப்படுத்தியது செல்வராகவன் தான். இவருடைய இயக்கத்தில் வெளியான துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை ஆகிய படங்களில் நடிகர் தனுஷ் தான் ஹீரோவாக நடித்திருந்தார். சமீபகாலமாக செல்வராகவன் நடிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் பல படங்களில் நடித்துள்ள இவர் கடைசியாக தனுஷ் இயக்கத்திலும் நடிப்பிலும் உருவாகி இருந்த ராயன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அடுத்ததாக செல்வராகவன் புதுப்பேட்டை 2 திரைப்படத்தை இயக்கப் போவதாக ஏற்கனவே செய்திகள் கசிந்து இருந்தது. இந்நிலையில் செல்வராகவன், ஜி.வி. பிரகாஷ் ஆகியோரின் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. அதாவது செல்வராகவன் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன ஆகிய படங்களுக்கு ஜிவி பிரகாஷ் தான் இசையமைத்திருந்தார். தற்போது மூன்றாவது முறையாக புதிய படம் ஒன்றில் இந்த கூட்டணி இணைந்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது.

மேலும் இது தொடர்பாக ஜிவி பிரகாஷ் தனது சமூக வலைதள பக்கத்தில் செல்வராகவன் தான் கம்போசிங்கில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அறிவித்திருக்கிறார். அதேசமயம் இந்த கூட்டணியில் உருவாகும் புதிய படமான வேறு எந்த படத்தின் இரண்டாம் பாகம் இல்லை என்பதும் இது முழுக்க முழுக்க புதிய படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

MUST READ