Homeசெய்திகள்சினிமாசிவகார்த்திகேயன் நடிக்கும் 'அமரன்'.... ஹே மின்னலே பாடலைத் தொடர்ந்து புதிய பாடல் வெளியீடு!

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘அமரன்’…. ஹே மின்னலே பாடலைத் தொடர்ந்து புதிய பாடல் வெளியீடு!

-

- Advertisement -

அமரன் படத்திலிருந்து இரண்டாவது பாடல் வெளியாகி உள்ளது.

சிவகார்த்திகேயனின் 21வது படமாக உருவாகி இருக்கும் அமரன் திரைப்படம் வருகின்ற அக்டோபர் 31 தீபாவளி தினத்தன்று திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. சிவகார்த்திகேயன் நடிக்கும் 'அமரன்'.... ஹே மின்னலே பாடலைத் தொடர்ந்து புதிய பாடல் வெளியீடு!அதன்படி ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து தற்போது ப்ரோமோஷன் பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த படத்தினை ரங்கூன் படம் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்க கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் படத்தினை தயாரித்திருக்கிறது. ஜிவி பிரகாஷ் இதற்கு இசையமைத்துள்ளார். ராணுவத்தின் பின்னணியில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ராணுவ அதிகாரியாக நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடித்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

அதே சமயம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த படத்தில் இருந்து ஹே மின்னலே எனும் மெலோடி பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் இருந்து வெண்ணிலவு சாரல் எனும் இரண்டாவது பாடல் வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்துள்ளது. இந்தப் பாடல்வரிகளை யுகபாரதி எழுதியிருக்கும் நிலையில் கபில் கபிலன் மற்றும் ரக்ஷிதா சுரேஷ் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்.

மேலும் அமரன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை (அக்டோபர் 18) சாய்ராம் கல்லூரியில் நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ