spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாயாசகராக பட்டையை கிளப்பும் கவின்.... 'ப்ளடி பெக்கர்' ட்ரைலர் வெளியீடு!

யாசகராக பட்டையை கிளப்பும் கவின்…. ‘ப்ளடி பெக்கர்’ ட்ரைலர் வெளியீடு!

-

- Advertisement -

ப்ளடி பெக்கர் படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

நடிகர் கவின் ஆரம்பத்தில் சின்னத்திரையில் பணியாற்றி தற்போது தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் இளம் நடிகராக மாறியுள்ளார். யாசகராக பட்டையை கிளப்பும் கவின்.... 'ப்ளடி பெக்கர்' ட்ரைலர் வெளியீடு!இவரது நடிப்பில் கடைசியாக ஸ்டார் திரைப்படம் வெளியான நிலையில் அடுத்தது மாஸ்க் போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார் கவின். இதற்கிடையில் இவர், அறிமுக இயக்குனர் சிவபாலன் இயக்கத்தில் ப்ளடி பெக்கர் எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் கவினுடன் இணைந்து ரெடின் கிங்ஸ்லி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதனை ஜெயிலர் பட இயக்குனர் நெல்சன் திலிப் குமார் தனது பிலாமெண்ட் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரித்திருக்கிறார். ஜென் மார்ட்டின் இதற்கு இசையமைக்க சுஜித் சாரங் இதன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார். இந்த படம் வருகின்ற அக்டோபர் 31 அன்று தீபாவளி தினத்தை முன்னிட்டு திரைக்கு வர இருக்கிறது. அதற்கான முழு ஏற்பாடுகளும் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த படத்தில் இருந்து டீசர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அடுத்தது இந்த படத்தில் இருந்து ட்ரெய்லரும் வெளியாகி உள்ளது.

we-r-hiring

இந்த ட்ரெய்லரில் காட்டப்பட்டது போல், நடிகர் கவின் ஒரு பங்களாவிற்குள் செல்ல ஆசைப்படுகிறார். அந்த பங்களாவிற்குள் சென்று அங்குள்ள விலை உயர்ந்த பொருட்களை பயன்படுத்தி வருகிறார். அப்பொழுது சிலர் கவினின் கெட்டப்பை மாற்றி நடிக்க சொல்கிறார்கள். பங்களாவிற்கு வரும் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு மாதிரி நடிக்க வேண்டும் என கூறுகிறார்கள். ஒவ்வொருவரும் வந்து கவினை அடித்து பாடாய் படுத்துகிறார்கள். இப்படிதான் அந்த ட்ரெய்லர் நகருகிறது. இந்த ட்ரெய்லர் தற்போது வைரலாகி வருவதோடு இந்த படத்தின் கதை என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது.

MUST READ