Homeசெய்திகள்சினிமா'அமரன்' படத்திலிருந்து 'உயிரே' பாடல் வெளியீடு!

‘அமரன்’ படத்திலிருந்து ‘உயிரே’ பாடல் வெளியீடு!

-

- Advertisement -

அமரன் படத்திலிருந்து உயிரே பாடல் வெளியாகி உள்ளது.

சிவகார்த்திகேயன், சாய் பல்லவி, ராகுல் போஸ் ஆகியோரின் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் தான் அமரன். 'அமரன்' படத்திலிருந்து 'உயிரே' பாடல் வெளியீடு!இந்த படம் வீர மரணமடைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இதில் சிவகார்த்திகேயன் ராணுவ அதிகாரியாக நடித்திருக்கிறார். இந்த படம் சிவகார்த்திகேயனின் கேரியரில் மிகவும் முக்கியமான படமாக கருதப்படுகிறது. அதன்படி சிவகார்த்திகேயன் இந்த படத்தில் சீரியஸான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தினை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்க உலகநாயகன் கமல்ஹாசன் படத்தினை தயாரித்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் இதற்கு இசையமைத்திருக்கிறார். இந்தப் படம் நாளை (அக்டோபர் 31) தீபாவளி தினத்தன்று தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகிறது. அதன்படி கிட்டத்தட்ட 900க்கும் அதிகமான திரையரங்குகளில் இந்த படம் வெளியாக இருக்கிறது.

இதற்கிடையில் இந்த படத்தின் டீசரும், ட்ரெய்லரும் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. அதே சமயம் படத்தில் இருந்து ஹே மின்னலே, வெண்ணிலவு சாரல் ஆகிய பாடல்களும் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. இந்நிலையில் இந்த படத்தில் இருந்து உயிரே எனும் புதிய பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த பாடலும் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகிய இருவருக்குமான காதல் பாடலாகும்.

MUST READ