Homeசெய்திகள்சினிமாதிரையிலும் ஸ்டார், வாழ்க்கையிலும் ஸ்டார்.... நயன்தாராவின் திருமணப் படம் ரிலீஸ் குறித்த அறிவிப்பு!

திரையிலும் ஸ்டார், வாழ்க்கையிலும் ஸ்டார்…. நயன்தாராவின் திருமணப் படம் ரிலீஸ் குறித்த அறிவிப்பு!

-

- Advertisement -

நயன்தாராவின் திருமண ஆவணப்படம் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சரத்குமார் நடிப்பில் வெளியான ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நயன்தாரா. திரையிலும் ஸ்டார், வாழ்க்கையிலும் ஸ்டார்.... நயன்தாராவின் திருமணப் படம் ரிலீஸ் குறித்த அறிவிப்பு!அதைத்தொடர்ந்து இவர் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்து சந்திரமுகி எனும் திரைப்படத்தில் நடித்து பெயர் பெற்றார். மேலும் சூர்யா, விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து தற்போது லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார். அந்த வகையில் இவர் விஜய் சேதுபதியுடன் இணைந்து நானும் ரெளடி தான் எனும் திரைப்படத்தில் நடித்திருந்த நிலையில் அந்த படத்தை இயக்கிய விக்னேஷ் சிவனுக்கும், நயன்தாராவிற்கும் காதல் மலர்ந்தது. இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 9ஆம் தேதி இருவரும் மிக பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணம் பலரையும் திரும்பி பார்க்க வைத்தது. இவர்களின் திருமண விழாவிற்கு ஷாருக்கான், ரஜினி உள்ளிட்டோர் வருகை தந்து மணமக்களை வாழ்த்தினர். அதைத்தொடர்ந்து நான்கு மாதங்களில் வாடகை தாயின் மூலம் உலக், உயிர் என்ற இரட்டை ஆண் மகன்களை பெற்றெடுத்தனர். அதன் பிறகு இருவருமே சினிமாவில் பிஸியாக இருந்து வரும் நிலையில் இவர்களின் திருமண வீடியோ நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என ஏற்கனவே தகவல்கள் கசிந்திருந்தது.

அதன்படி ஒரு ஆவணப்படமாக உருவாகியுள்ள இவர்களின் திருமண நிகழ்ச்சி NAYANTHARA: Beyond The Fairy Tale என்ற தலைப்பில் நெட்பிளிக்ஸ்- இல் வெளியாக உள்ளது. இதனை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில் திரையிலும் நட்சத்திரம் வாழ்க்கையிலும் நட்சத்திரம் வாழ்க்கையிலும் நட்சத்திரம் என்று பதிவிட்டு வருகின்ற நவம்பர் 18ஆம் தேதி இந்த ஆவணப்படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

MUST READ