spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'கங்குவா' பட பிரபலம் காலமானார்..... அதிர்ச்சியில் படக்குழு!

‘கங்குவா’ பட பிரபலம் காலமானார்….. அதிர்ச்சியில் படக்குழு!

-

- Advertisement -

‘கங்குவா’ படத்தின் எடிட்டர் காலமானார்.

சூர்யா நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் திரைப்படம் தான் கங்குவா. இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்க ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.'கங்குவா' பட பிரபலம் காலமானார்..... அதிர்ச்சியில் படக்குழு! படத்தில் சூர்யாவுடன் இணைந்து திஷா பதானி, பாபி தியோல் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசை அமைத்துள்ளார். வெற்றி பழனிசாமி இதற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படம் வருகின்ற நவம்பர் 14ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாக தயாராகி வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் எடிட்டர் நிஷாத் யூசுப் உயிரிழந்துள்ளார். 'கங்குவா' பட பிரபலம் காலமானார்..... அதிர்ச்சியில் படக்குழு!43 வயதுடைய நிஷாத் யூசுப் இன்று (அக்டோபர் 30) அதிகாலை 2 மணி அளவில் கொச்சி, பனம்பில்லி நகரில் உள்ள தனது வீட்டில் இறந்து கிடந்து இருக்கிறார். இந்த தகவல் கங்குவா பட குழுவினர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் திரை துறையினர் பலரும் இவரது மறைவிற்கு தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

we-r-hiring

இவர் கங்குவா படத்தில் மட்டுமல்லாமல் டோவினோ தாமஸ் நடிப்பில் வெளியான தல்லுமாலா படத்திலும் எடிட்டராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ