Homeசெய்திகள்சினிமாநடிகர் நெப்போலியனின் மகன் தனுஷிற்கு ஜப்பானில் திருமணம்

நடிகர் நெப்போலியனின் மகன் தனுஷிற்கு ஜப்பானில் திருமணம்

-

- Advertisement -

நடிகர் நெப்போலியனின் மகன் தனுஷிற்கு ஜப்பானில் திருமணம் நடைபெற்றது; நெல்லையை சேர்ந்த அக்ஷயாவைக் கரம்பிடித்துள்ளார்.

நடிகர் நெப்போலியனின் மகன் தனுஷிற்கு ஜப்பானில் திருமணம்

we-r-hiring

நடிகர் நெப்போலியனுக்கு தனுஷ், குணால் என்று 2 மகன்கள் உள்ளனர். இதில் நெப்போலியனின் மூத்த மகன் தனுஷிற்கு சிறுவயதில் இருந்தே தசைச் சிதைவு என்கிற அரியவகை நோய் இருந்திருக்கிறது. இந்த நோய் ஒரு கட்டத்தில் தீவிரமாகி 10 வயதுக்கு மேல் தனுஷால் நடக்க இயலாமல் போயிற்று. அதன் பின்னர் சித்த வைத்தியத்தின் மூலம் அவருக்கு சிகிச்சை அளித்து வந்த நெப்போலியன், மகனுக்கு தேவையான மருத்துவ வசதி அமெரிக்காவில் இருந்ததால் குடும்பத்துடன் அமெரிக்காவில்  செட்டில் ஆகிவிட்டார்.

நெப்போலியன் தன் மகன் மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார் என்பது அவர் தனது மகனுக்காக பிரம்மாண்டமாக கட்டிய வீட்டை பார்தாலே தெரியும் என கூறுகின்றனர்.

நெப்போலியன் தன் மகனுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அந்த வீட்டில் செய்து கொடுத்திருக்கிறார் . இப்படி மகன் மீது உயிரையே வைத்திருக்கும் நெப்போலியன் அவரது மகனின் திருமணத்தை  அம்பானியையே மிஞ்சும் அளவு ஜப்பானில் நடத்தி உள்ளார்.

நெப்போலியன் மகன் தனுஷுக்கு ஜப்பானுக்கு செல்ல வேண்டும் என்பது நீண்டநாள் கனவாக இருந்தது. அந்த கனவை நனவாக்கும் வகையில் தனுஷின் கல்யாணத்தையே ஜப்பானில் நடத்தி உள்ளார் நெப்போலியன். திருநெல்வேலியை சேர்ந்த அக்‌ஷயா என்கிற பெண்ணுடன் தனுஷுக்கு இன்று (நவ.07) திருமணம் நடைபெற்று உள்ளது. இத்திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமின்றி தமிழ் திரையுலகை சேர்ந்த பிரபலங்களும் கலந்துகொண்டுள்ளனர்.

தனுஷ் நடிக்கும் ‘இட்லி கடை’ படத்தின் முக்கிய அறிவிப்பு!

MUST READ