spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுநடிகர் டெல்லி கணேஷ் மறைவு: விஜய் இரங்கல்..

நடிகர் டெல்லி கணேஷ் மறைவு: விஜய் இரங்கல்..

-

- Advertisement -
நடிகர் டெல்லி கணேஷ் மறைவு: விஜய் இரங்கல்..
பழம்பெரும் நடிகர் டெல்லி கணேஷ் மறைவுக்கு நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத கலைஞர்களில் ஒருவராக திகழ்ந்த டெல்லி கணேஷ், டெல்லி கணேஷ் அவ்வப்போது உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் வயது மூப்பு மற்றும் கடந்த 3 நாட்களாக தீவிர உடல்நலக்குறைவால் கஷ்டப்பட்டு வந்த அவர், நேற்று இரவு 11.30 மணியளவில் காலமானார். சென்னை ராமாபுரம் செந்தமிழ் நகரில் உள்ள இல்லத்தில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பல திரைப்பிரபலங்களில் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

நடிகர் டெல்லி கணேஷ் மறைவு: விஜய் இரங்கல்..

we-r-hiring

இந்நிலையில் பழம்பெரும் நடிகர் டெல்லி கணேஷ் மறைவுக்கு, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மூத்த நடிகர் திரு. டெல்லி கணேஷ் அவர்கள் உடல்நலக் குறைவால் காலமான செய்தி, வேதனை அளிக்கிறது. 40 ஆண்டுகளுக்கு மேலாக 400 க்கும் அதிகமான திரைப்படங்களில் பல தரப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்துப் புகழ்பெற்ற அவரது திடீர் மறைவு, தமிழ்த் திரையுலகிற்குப் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

MUST READ