சிறுத்தை, வீரம், விவேகம் ஆகிய படங்களில் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சிறுத்தை சிவா. இவரது இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் திரைப்படம் தான் கங்குவா.
இந்தப் படம் இன்று (நவம்பர் 14) தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகி இருக்கிறது. மிகப்பிரமாண்டமாகவும் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி இருக்கும் இந்த படத்தினை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைத்திருக்கிறார். படத்தில் சூர்யாவுடன் இணைந்து திஷா பதானி, யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க பாபி தியோல் வில்லனாக நடித்திருக்கிறார். அதுபோக மற்றொரு பெரிய நடிகர் ஒருவர் வில்லனாக நடித்திருக்கிறார். பீரியாடிக் படமாக உருவாகி இருக்கும் இந்த படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது.
அதன்படி ரசிகர்கள் பலரும் கங்குவா படம் குறித்து தங்களின் கருத்துக்களை சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் சிறுத்தை சிவா, சென்னை காசி திரையரங்கில் முதல் நாள் முதல் காட்சியை காண வந்துள்ளார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அமெரிக்காவில் உள்ள தனது நண்பர்கள் படத்தை பார்த்துவிட்டு போன் பண்ணி பாராட்டுனாங்க. இந்த படம் மிகப்பெரிய வெற்றி படம் என்று சொன்னாங்க. ரசிகர்களுடன் படத்தை பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
- Advertisement -


