spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஆர்.ஜே. பாலாஜியின் 'சொர்க்கவாசல்'..... முதல் நாள் வசூல் விபரம்!

ஆர்.ஜே. பாலாஜியின் ‘சொர்க்கவாசல்’….. முதல் நாள் வசூல் விபரம்!

-

- Advertisement -

ஆர்.ஜே. பாலாஜியின் சொர்க்கவாசல் படத்தின் முதல் நாள் வசூல் விபரம் வெளியாகி உள்ளது.ஆர்.ஜே. பாலாஜியின் 'சொர்க்கவாசல்'..... முதல் நாள் வசூல் விபரம்!

ஆர்.ஜே. பாலாஜி நடிப்பில் (நேற்று) நவம்பர் 29ஆம் தேதி திரையிடப்பட்ட திரைப்படம் தான் சொர்க்கவாசல். இந்த படத்தினை அறிமுக இயக்குனர் சித்தார்த் விஸ்வநாத் இயக்க ஸ்வைப் ரைட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தது. கிறிஸ்டோ சேவியர் இந்த படத்திற்கு இசையமைக்க பிரின்ஸ் ஆண்ட்ர்ஸன் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருந்தார். இந்த படத்தில் ஆர் ஜே பாலாஜியுடன் இணைந்து சானியா ஐயப்பன், செல்வராகவன், நட்டி நட்ராஜ், கருணாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படம் முழுக்க முழுக்க ஜெயிலில் நடப்பது போன்று அமைக்கப்பட்டு இருந்தது. அதன்படி இந்த படத்தின் முதல் பாதி உணர்வுப்பூர்வமாக நகர்ந்த நிலையில் இரண்டாம் பாதியில் ரத்தம் தெளிக்கும் வன்முறை காட்சிகள் இடம்பெற்று இருந்தது. மேலும் ஆர்.ஜே பாலாஜி தனது அசாத்தியமான நடிப்பை வெளிப்படுத்தி கைத்தட்டல் பெற்றுள்ளார். ஆர்.ஜே. பாலாஜியின் 'சொர்க்கவாசல்'..... முதல் நாள் வசூல் விபரம்!அதேசமயம் செல்வராகவன் போன்றவரும் தனது நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். அடுத்தது பின்னணி இசை மற்றும் ஒளிப்பதிவு ஆகியவை படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. இவ்வாறு இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் இந்த படம் முதல் நாளில் இந்தியா முழுவதும் ஒரு கோடி வசூல் செய்திருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இனிவரும் நாட்களிலும் படத்தின் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ