Homeசெய்திகள்சினிமா'சூர்யா 45' படத்தில் இணையும் லப்பர் பந்து பட நடிகை.... வெளியான புதிய தகவல்!

‘சூர்யா 45’ படத்தில் இணையும் லப்பர் பந்து பட நடிகை…. வெளியான புதிய தகவல்!

-

- Advertisement -

லப்பர் பந்து பட நடிகை சூர்யா 45 படத்தில் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

கடந்த செப்டம்பர் மாதம் ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டக்கத்தி தினேஷ் ஆகியோரின் நடிப்பில் வெளியான படம் தான் லப்பர் பந்து. 'சூர்யா 45' படத்தில் இணையும் லப்பர் பந்து பட நடிகை.... வெளியான புதிய தகவல்!கிரிக்கெட் சம்பந்தமான கதைக்களத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. இந்த படத்தில் நடித்திருந்த அனைவருமே பல்வேறு தரப்பினரிடையே பாராட்டுகளை பெற்றனர். அதிலும் அட்டகத்தி தினேஷுக்கு ஜோடியாக நடித்திருந்த சுவாசிகாவின் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது. இந்நிலையில் நடிகை சுவாசிகா, சூர்யா 45 படத்தில் இணைந்திருப்பதாக புதிய அப்டேட் வெளிவந்துள்ளது. இதனை நடிகை சுவாசிகாவே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
அதாவது ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இந்த படத்திற்கு தற்காலிகமாக சூர்யா 45 என்ற தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. சமீபத்தில் தான் இந்த படத்தின் பூஜை சிறப்பாக நடந்து முடிந்தது. 'சூர்யா 45' படத்தில் இணையும் லப்பர் பந்து பட நடிகை.... வெளியான புதிய தகவல்!அதே சமயம் இந்த படத்தின் படப்பிடிப்புகளும் கோயம்புத்தூரில் நடைபெற்று வருகின்றன. இதனை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஏ ஆர் ரகுமான் இதற்கு இசை அமைக்கிறார். இந்த படமானது ஃபேண்டஸி கதைகளத்தில் உருவாக இருக்கிறது. மேலும் இந்த படத்தில் நடிகர் சூர்யாவுடன் இணைந்து திரிஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில் நடிகை சுவாசிகாவும் நடிக்க இருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. அடுத்தது சுவாசிகா இந்த படத்தில் என்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறித்த தகவல் இனிவரும் நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ