spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு’எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ நூல் வெளியீட்டு விழாவில் விஜய் பங்கேற்பு... அம்பேத்கர் சிலையுடன் செல்பி எடுத்து...

’எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ நூல் வெளியீட்டு விழாவில் விஜய் பங்கேற்பு… அம்பேத்கர் சிலையுடன் செல்பி எடுத்து மகிழ்ச்சி!

-

- Advertisement -

சென்னையில் நடைபெறும் ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்க வந்த தவெக தலைவர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

we-r-hiring

அண்ணல் அம்பேத்கரின் நினைவு தினத்தையொட்டி சென்னை வர்த்தக மையத்தில் இன்று ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ எனும் புத்தகம் வெளியீட்டு விழா நடைபெறுகிறது. விடுதலை சிறுத்தைகள் துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுன் தொகுத்துள்ள இந்த புத்தகத்தை விகடன் பதிப்பகம் வெளியிடுகிறது. இந்த நூலை தமிழக வெற்றிக் கழகத்தலைவரும், நடிகருமான விஜய் வெளியிட, ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு பெற்றுக்கொள்ள உள்ளார்.

சென்னை வர்த்தக மையத்தில் தொடங்கிய நிகழ்ச்சிக்கு வருகை தந்த தவெக தலைவர் விஜய்க்கு, பறை இசை முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, நிகழ்ச்சி நடைபெறும் வளாகத்தில் உள்ள அம்பேத்கரின் சிலைக்கு, விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மேலும், அங்கு வைக்கப்பட்டுள்ள அம்பேத்கர் உருவ சிலையுடன் விஜய் புகைப்படமும் எடுத்துக் கொண்டார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

MUST READ