Homeசெய்திகள்சினிமாராஷ்மிகா மந்தனா நடிக்கும் 'தி கேர்ள் பிரண்ட்' படத்தின் டீசர் வெளியீடு!

ராஷ்மிகா மந்தனா நடிக்கும் ‘தி கேர்ள் பிரண்ட்’ படத்தின் டீசர் வெளியீடு!

-

- Advertisement -

ராஷ்மிகா மந்தனா நடிக்கும் தி கேர்ள் பிரண்ட் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

நடிகை ராஷ்மிகா மந்தனா தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். குறுகிய காலத்திலேயே தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தையும், மிகப்பெரிய அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர் ராஷ்மிகா.ராஷ்மிகா மந்தனா நடிக்கும் 'தி கேர்ள் பிரண்ட்' படத்தின் டீசர் வெளியீடு! இவர் சமீபத்தில் வெளியான புஷ்பா 2 திரைப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அடுத்தது தனுஷின் குபேரா, ஏ ஆர் முருகதாஸ் இயக்கி வரும் சிக்கந்தர் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் இவர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்கப் போவதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் இவர் தி கேர்ள் பிரண்ட் எனும் திரைப்படத்தின் நடித்திருக்கிறார். இந்த படத்தில் ராஷ்மிகாவுடன் இணைந்து தீக்ஷித் ஷெட்டி, ராவ் ரமேஷ், ரோகிணி ஆகியோர் நடித்திருக்கின்றனர். இந்த படத்தை பிரபல நடிகர் ராகுல் ரவீந்திரன் இயக்குகிறார். கிருஷ்ணன் வசந்த் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய ஹேசம் அப்துல் வாகப் இசையமைக்கிறார். கீதா ஆர்ட்ஸ் நிறுவனமும் மாஸ் மூவி மேக்கர்ஸ் நிறுவனமும் தீரஜ் மொகிலினேனி நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இந்த படம் தெலுங்கு மொழியை முன்னணியாக கொண்டு உருவாக்கி வரும் நிலையில் தமிழ் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில் தற்போது இந்த படத்தின் டீசரும் வெளியாகி உள்ளது. இந்த டீசரை பார்க்கும்போது இந்த படத்தில் ராஷ்மிகா கல்லூரி மாணவியாக நடித்திருக்கிறார். அப்போது அவருக்கு ஏற்படும் காதலும் அதனால் ஏற்படும் சிக்கல்கள் குறித்து இந்த படம் பேசுவது போன்று தெரிகிறது. மேலும் இந்த டீசர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ