நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர். அதே சமயம் இவர் கோலிவுட் மட்டுமல்லாமல் பாலிவுட் , ஹாலிவுட் வரை சென்று எல்லை தாண்டி சாதனை படைத்து வருகிறார். இவரது நடிப்பில் கடைசியாக ராயன் எனும் திரைப்படம் வெளியானது. அடுத்தது குபேரா எனும் திரைப்படத்தை கைவசம் வைத்துள்ளார் தனுஷ். மேலும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படத்தை இயக்கி வரும் தனுஷ், இட்லி கடை எனும் திரைப்படத்தையும் தானே இயக்கி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதைத்தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிப்பதற்கு கமிட்டாகி இருக்கிறார். அத்துடன் தேரே இஷ்க் மெய்ன் எனும் திரைப்படத்திலும் நடிக்க உள்ளார் தனுஷ்.
இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் நடிகர் நடிகர் தனுஷ் தனது வாழ்வில் எவ்வளவு தடைகள் வந்தாலும் அதனை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் தன்னுடைய வெற்றிப் பாதையில் மட்டுமே முழு கவனத்துடன் செல்பவர்.
Naughtiest Don 😎🔥#Dhanush @dhanushkraja pic.twitter.com/q970g8L3De
— Maestro MathaN ᵈʰᵃⁿᵘˢʰ ᶠᵃⁿ (@maestromathan) December 8, 2024
அந்த வகையில்
தனுஷுக்கு தமிழ்நாட்டில் மட்டுமே ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. அதேபோல் லண்டனிலும் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அதாவது நடிகர் தனுஷ் லண்டனில் நடந்த ஒரு உணவாக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டுள்ளார். அப்போது நடிகர் தனுஷை காண லண்டன் மக்கள் பலரும் கூட்டம் கூட்டமாக திரண்டு வந்துள்ளனர். இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.