சிக்கந்தர் படத்தின் டீசர் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் ஏ.ஆர். முருகதாஸ். இவரது இயக்கத்தில் தற்போது சிக்கந்தர் எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் சல்மான் கான் ஹீரோவாக நடிக்கிறார். மேலும் இவருடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, காஜல் அகர்வால், சத்யராஜ், சுனில் ஷெட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களின் நடித்து வருகின்றனர். இந்த படத்தை சஜித் நதியத்வாலா தயாரிக்கிறார். ஏற்கனவே இந்த படம் தொடர்பான அறிவிப்பு வெளியான நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்புகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அதே சமயம் இந்த படமானது 2025 ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாலிவுட் நடிகர் சல்மான் கானின் பிறந்த நாளான இன்று (டிசம்பர் 27) சிக்கந்தர் படத்தின் டீசர் வெளியாகும் என படக்குழுவினர் சார்பில் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
In light of the passing of our esteemed former Prime Minister Manmohan Singh Ji, we regret to announce that the release of the Sikandar teaser has been postponed to 28th December 11:07 AM. Our thoughts are with the nation during this time of mourning. Thank you for understanding.…
— Nadiadwala Grandson (@NGEMovies) December 27, 2024
ஆனால் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவின் காரணமாக இந்த படத்தின் டீசர் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் இந்த படத்தின் டீசர் நாளை (டிசம்பர் 28) காலை 11.07 மணியளவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சல்மான் கான் சமீபத்தில் வருண் தவான் நடிப்பில் வெளியான பேபி ஜான் திரைப்படத்தில் கேமியா ரோலில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.