spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபத்து ஆண்டுகள் கழித்து இணையும் வெற்றி கூட்டணி

பத்து ஆண்டுகள் கழித்து இணையும் வெற்றி கூட்டணி

-

- Advertisement -

பத்து ஆண்டுகள் கழித்து இணையும் வெற்றி கூட்டணி

முன்னணி நடிகையாய் தமிழ் சினிமாவில் வலம் வருபவர் நயன்தாரா. இவர் ஐயா படத்தின் மூலம் தனது திரையுலக வாழ்க்கையை தொடங்கியவர். தற்பொழுது டாப் ஹீரோயின் ஆக கோலிவுடில் வலம் வந்து கொண்டிருக்கிறார் நயன்.

தற்பொழுது பாலிவுட்டிலும் ஷாருக்கானின் ஜவான் படத்தின் மூலம் கால்  பதித்துள்ளார் நயன்தாரா. நயன் கடந்த ஆண்டு விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்ட பிறகு வாடைக்குத்தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளுக்கு தாயானார்.

we-r-hiring

இதனால் பல சர்ச்சைகளுக்கு ஆளானார். அப்பொழுதும் தன்னுடைய கேரியரை பாதிக்காத வகையில் பார்த்துக்கொண்டார் நயன். தற்பொழுது அட்லீ இயக்கும் ஜவான் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இப்படம் முடிந்தவுடன் நயன் தன்னுடைய 75 வது படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை சார் பட்டா பரம்பரை 2 படத்தை தயாரிக்க உள்ள நாத் எல் ஸ்டுடியோஸ் தயாரிக்க அறிமுக இயக்குனர் நிதிஷ் கிருஷ்ணா இயக்க உள்ளார். இந்தப் படத்தின் பூஜை சில நாட்கள் முன்பு மிகவும் எளிதாக போடப்பட்டது.

இந்த படத்தில் நயன்தாராவுக்கு ஜோடியாக கதாநாயகனாக யார் நடிக்கப் போகிறார்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது அவர் யார் என்றால் பத்து வருடத்திற்கு முன் அட்லி இயக்கத்தில் நயன்தாராவுடன் ராஜா ராணி படத்தில் கதாநாயகனாக நடித்த ஜெய் தான்.

அப்பொழுது இப்படம் சூப்பர் ஹிட் படமாக வெற்றி பெற்றது. பத்து ஆண்டுகள் கழித்து இந்த எவர்கிரீன் ஜோடி மீண்டும் இணைந்துள்ளது அறிந்து ரசிகர்கள் குத்தாட்டம் போட்டுக் கொண்டிருக்கின்றனர்.

MUST READ