spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்’சீமான் சொல்வதெல்லாம் பச்சைப் பொய்...’ புட்டுப்புட்டு வைத்த பிரபாகரனின் அண்ணன் மகன்..!

’சீமான் சொல்வதெல்லாம் பச்சைப் பொய்…’ புட்டுப்புட்டு வைத்த பிரபாகரனின் அண்ணன் மகன்..!

-

- Advertisement -

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பெரியார் பற்றி பேசியது பிரளங்களை ஏற்படுத்தி வருகிறது. மேலும் சீமான் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பதும் அடுத்தடுத்து அம்பலமாகி வருகிறது. இதனை பிரபாகரனின் அண்ணன் மகனும், பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் கூறியுள்ளதால் இந்த விவகாரம் மேலும் சூடுபிடித்துள்ளது.சீமான் கண்டிப்பாக மன்னிப்பு கேட்க வேண்டும் - புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம்

பிரபாகரனின் அண்ணன் மகன் பிரபல செய்தி சேனலுக்கு‌ அளித்துள்ள பேட்டியில், ஒளிப்பதிவாளர் சந்தோஷ் பேட்டி தந்தால் மேலும் பல உண்மைகள் வெளியாகுமென கூறியிருந்தார்.

we-r-hiring

நேற்று அதே சேனலுக்கு சந்தோஷ் தந்த பேட்டியின் முக்கிய அம்சங்களாக அவர் கூறியதில், ‘‘தலைவருடன் சீமான் எடுத்ததாக இணையத்தில் வெளியான புகைப்படங்கள் அனைத்தும் ஆதாரமற்றவை. பிரபாகரனுக்கு அருகில் சீமான் கையை கட்டிக்கொண்டு நிற்கும் ஃபோட்டோ ஒரிஜினல் இல்லை.

துப்பாக்கி பயிற்சி ஃபோட்டோ ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்தது. பயிற்சி களத்தில் சீமானை அனுமதிக்கவே இல்லை. தலைவர் இவருக்கு உணவு பரிமாறவில்லை. இட்லி, ஆமைக்கறி பரிமாறிய கதைகள் பொய். தலைவரின் மனைவியை இவர் சந்திக்கவே இல்லை. வெளிநபர்களுக்கு தன் குடும்பத்தாரை தலைவர் சந்திக்க வைத்ததே இல்லை. பெரியாரையும், திராவிடத்தையும் தலைவர் என்றுமே தவறாக பேசியதில்லை.

ஆடியோவை தருமாறு என்னிடம் கெஞ்சினார். அதில் ஈழத்திற்கு ஆதரவாக பேசிய மற்ற தலைவர்களின் பெயரும் இருந்தது. ஆனால் சீமான் பெயர் மட்டும் இருந்ததாக ஆடியோவை கட் செய்துள்ளனர். சீமானின் செயல்கள் சரியில்லை என்பதை உணர்ந்த பிறகு தொடர்பை துண்டித்து கொண்டனர். அங்கு மற்றவர்களுக்கு நேர்ந்த அனுபவங்கள் பலவற்றை தனக்கு நடந்ததாக கதை கட்டி பேசி வருகிறார் சீமான்’’ எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ