spot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்தவெக துணைப் பொதுச் செயலாளர் ஆகிறாரா ஆதவ்?

தவெக துணைப் பொதுச் செயலாளர் ஆகிறாரா ஆதவ்?

-

- Advertisement -

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது ஆண்டு துவக்க விழா வருகின்ற பிப்ரவரி 2ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. கட்சியின் தலைமை அலுவலகமான பனையூரில் இதற்காக கட்சியின் கொள்கை தலைவர்கள் சிலை நிறுவப்பட்டுள்ள நிலையில் கட்சியின் தலைவர் விஜய் சிலைகளை திறந்து வைக்கிறார்.

தவெக துணைப் பொதுச் செயலாளர் ஆகிறாரா ஆதவ்?தொடர்ந்து மாவட்ட செயலாளர்கள் அறிமுக கூட்டமும், அதன் பின்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் துணை பொதுச்செயலாளர் பதவி வகித்து கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஆதவ் அர்ஜுனாவுக்கு தமிழக வெற்றிக் கழகத்தில் மாநில அளவிலான முக்கிய பொறுப்பையும் வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.

we-r-hiring

அதன் பின்னர் தமிழக வெற்றிக் கழகத்திற்கு மாற்று கட்சியினர் இணைய விருப்பம் தெரிவிக்கும் பட்சத்தில் அவர்களுக்கான இணைப்பு விழாவும் நடத்த தமிழக வெற்றிக் கழக முடிவு செய்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்திற்கு தேர்தல் வியூகங்களை வகுக்கும் ஜான் ஆரோக்கிய சாமியுடன்  இணைந்து வாய்ஸ் ஆப் காமன் நிறுவனத்தின் மூலம் ஆதவ் அர்ஜுனாவும் கட்சி வளர்ச்சி பணிகளை மேற்கொள்வார் எனவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது .

தமிழக வெற்றிக் கழகம் நிறுவப்பட்டு ஓராண்டு நிறைவு பெற உள்ள நிலையில் இதுவரை மாற்று கட்சியினர் யாரும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைக்கப்படவில்லை, இதனிடையே மாவட்ட செயலாளர்கள் நியமனத்திற்கு பிறகாக மாற்றுக் கட்சியினர் இணைப்புகள் எதிர்பார்க்கலாம் என கூறப்படுகிறது .

MUST READ