Homeசெய்திகள்அரசியல்வெயில் அதிகமாக இருக்கு.. புளியமரத்துக்கு கீழே நின்றுகொண்டு பொறுமையாக உள்ளே போங்க! – தாராபுரம் தவெக...

வெயில் அதிகமாக இருக்கு.. புளியமரத்துக்கு கீழே நின்றுகொண்டு பொறுமையாக உள்ளே போங்க! – தாராபுரம் தவெக பிரச்சார இடத்தில் பொதுமக்களுக்கு போலீசார் அறிவுரை

-

- Advertisement -

விஜயின் பிரச்சாரத்தை காண திரண்ட மக்கள்வெயில் அதிகமாக இருக்கு.. புளியமரத்துக்கு கீழே நின்றுகொண்டு பொறுமையாக உள்ளே போங்க! – தாராபுரம் தவெக பிரச்சார இடத்தில் பொதுமக்களுக்கு போலீசார் அறிவுரைதாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று அங்கு பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். விஜயின் பிரச்சாரத்தை காண்பதற்காக பொதுமக்கள் மற்றும் தவெக தொண்டர்கள் அதிகாலை முதலே பிரச்சாரத் திடல் நோக்கி வரத் தொடங்கியுள்ளனர்.

இதனால் பிரச்சார இடம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மக்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

we-r-hiring

வெயிலில் காத்திருந்த பொதுமக்கள்

பிரச்சார நிகழ்ச்சி தொடங்குவதற்கு இன்னும் பல மணி நேரம் உள்ள நிலையிலும், பொதுமக்கள் பலர் முன்கூட்டியே வந்து காத்திருக்கின்றனர். மதிய நேரம் நெருங்கி வருவதால் வெயிலின் தாக்கமும் அதிகரித்து வருகிறது.

இதையடுத்து, பொதுமக்கள் நீண்ட நேரம் வெயிலில் நிற்பதை தவிர்க்கும் வகையில் போலீசார் அறிவுரை வழங்கினர்.

“புளியமரத்துக்கு கீழே நின்றுகொண்டு பொறுமையாக உள்ளே போங்க”

அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், பொதுமக்களிடம், “வெயில் அதிகமாக இருக்கு. இங்கயே புளியமரத்துக்கு கீழே நின்னுட்டு பொறுமையாக உள்ளே போங்க. Function ஆரம்பிக்க இன்னும் 3 மணி நேரத்துக்கு மேல இருக்கு” என அறிவுறுத்தினர்.

நிகழ்ச்சி தொடங்குவதற்கு இன்னும் நேரம் இருப்பதால் அவசரப்பட்டு கூட்டமாக உள்ளே செல்ல வேண்டாம் என்றும், அனைவரும் பொறுமையாக இருக்குமாறும் போலீசார் கேட்டுக்கொண்டனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

விஜயின் வருகையை முன்னிட்டு பிரச்சாரத் திடலில் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். கூட்டத்தை ஒழுங்குபடுத்துதல், பொதுமக்கள் பாதுகாப்பாக நிற்பதற்கான ஏற்பாடுகள் செய்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் போலீசார் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.

விஜயின் வருகைக்காக காத்திருக்கும் மக்கள்

விஜயின் பிரச்சார உரையை நேரில் காண வேண்டும் என்ற ஆர்வத்தில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் தவெக தொண்டர்கள் தாராபுரம் பிரச்சாரத் திடல் பகுதியில் காத்திருக்கின்றனர்.

நிகழ்ச்சி தொடங்குவதற்கு இன்னும் பல மணி நேரம் உள்ள நிலையிலும் மக்கள் திரண்டு வருவதால், தாராபுரம் பகுதியில் தேர்தல் பிரச்சார சூழல் பரபரப்பாக காணப்படுகிறது.

விஜயை தான் பார்க்க வந்திருக்கோம்.. இதற்கு முன்னாடி பார்த்தது இல்ல! – தாராபுரத்தில் விஜயின் பிரச்சார உரையை காண திரண்டு வரும் மக்கள்!

MUST READ