spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாநட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள 'கண்ணப்பா'..... கவனம் ஈர்க்கும் டீசர்!

நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள ‘கண்ணப்பா’….. கவனம் ஈர்க்கும் டீசர்!

-

- Advertisement -

கண்ணப்பா படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள 'கண்ணப்பா'..... கவனம் ஈர்க்கும் டீசர்!

திரைத் துறையில் புதினங்கள், காவியங்களை தழுவி பல படங்கள் உருவாகி வருகிறது. அந்த வகையில் தெலுங்கு திரை உலகில் உருவாகியுள்ள ஆன்மீகத் திரைப்படம் தான் கண்ணப்பா. இந்த படமானது சிவபெருமானின் தீவிர பக்தன் கண்ணப்பரை பற்றிய கதை என்பதால் இந்த படத்திற்கு கண்ணப்பா என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தை முகேஷ் குமார் சிங் இயக்கியுள்ளார். இதில் விஷ்ணு மஞ்சு கண்ணப்பா வேடத்தில் நடிக்க அவருடன் இணைந்து மோகன் பாபு, பிரபாஸ் ,மோகன்லால், அக்ஷய்குமார், சரத்குமார், காஜல் அகர்வால், ஐஸ்வர்யா பாஸ்கரன், ப்ரீத்தி முகுந்தன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை 24 ஃப்ரேம்ஸ் பேக்டரி நிறுவனம் தயாரித்திருக்கிறது.

we-r-hiring

ஷெல்டன் ஷா ஒளிப்பதிவு செய்ய ஸ்டீபன் தேவசி இசையமைத்திருக்கிறார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி வரும் இந்த படமானது 2025 ஏப்ரல் 25ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி இருக்கும் இந்த டீசர் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்து இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ