spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்எடப்பாடியாரே ஏற்றுக்கொண்டாலும் எங்களால் முடியாது… பகையாளியான ஓ.பி.எஸின் பங்காளிகள்..!

எடப்பாடியாரே ஏற்றுக்கொண்டாலும் எங்களால் முடியாது… பகையாளியான ஓ.பி.எஸின் பங்காளிகள்..!

-

- Advertisement -

ஓ.பி.எஸ் எப்பாடியாவது அதிமுகவில் மீண்டும் இணைய வேண்டும் என கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். ஆனாலும் விடாப்படியாக இருந்த எடப்பாடி பழனிசாமி சற்று மனமிறங்கி வருவதாகக் கூறப்படுகிறது.

we-r-hiring

ஆனாலும், ஓ.பி.எஸ் இணைப்பு விஷயத்தில் எடப்பாடி பழனிசாமி மனம் மாறிவிடக்கூடாது என்பதில் தேனி மாவட்ட நிர்வாகிகளே பிடிவாதமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

ஒரு பக்கம் அதிமுகவில் மீண்டும் இணைய தூது மேல் தூது அனுப்பி வருகிறார் ஓ.பன்னீர்செல்வம். சில முறை முதல்வராகவும், துணை முதல்வராகவும், வலுவான அமைச்சர் பதவிகளில் இருந்தும் இப்போது அவரால் கட்சிக் கரைவேட்டிகூட கட்ட முடியாத பரிதாபத்தில் இருக்கிறார். ஆனாலும், அவரது பேசுவதை மடைமாற்றி விட்டு, எடப்பாடி பழனிசாமி தவறியும் மனம் மாறி விடக்கூடாது என தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் பிடிவாதம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

ஓ.பன்னீர்செல்வம்

தேனியில் உள்ள பெரியபாளையத்தில் சமீபத்தில் நடந்த அதிமுக கூட்டத்தில், ”நானே சீனியர் எனக்கூறி, ஓ.பி.எஸை, எடப்பாடி பழனிசாமி கடுமையாக வாரி எடுத்தார். ஆனாலும், அதிமுகவில் முக்கிய பொறுப்பில் உள்ள சிலரோடு, ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்தி, ஒன்றிணைந்தால் பலம் என்பது போல பேசி வருகிறார்கள். ஒரு சிலர், ‘பேசாமல் இணைந்தால்தான் என்ன..?’ என்கிற ரீதியில் பேச ஆரம்பிக்கும்போது, சிலர் குறுக்கே பாய்ந்து, ‘அவர் தேனி மாவட்டத்தையே தன் கைக்குள் வைத்திருந்தபோது, ஆமெல்லாம் எங்கே இருந்தோம? நமக்கு ஏதாவது நன்மை செய்திருக்கிறாரா..?

eps ops

அவர் பெயரைச் சொல்லி சிலர் மட்டும்தானே அதிகமாக சம்பாதித்தார்கள். இப்போது கட்சி ஒன்றிணைந்தால் நம்மை எல்லாம் பழையபடி செல்லாக்காக்கி விடுவார் ஓ.பி.எஸ். அவரது ஆதரவாளர்கள் கைதான் ஓங்கும். அதிமுக ஆட்சிக்கு வந்தால் என்ன? வராவிட்டால் நமக்கு என்ன? பேசாமல் பதவியை அனுபவித்து போய்க்கொண்டே இருக்க வேண்டும்’ என்கிற ரீதியில் பேசி பூ முடிந்து வருகிறார்களாம். இதென்ன இப்படி எல்லாம் யோசிக்கிறாங்க என ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள், விழிபிதுங்க முழிப்பதாகச் சொல்கிறார்கள்.

MUST READ