நீட் தேர்வை எதிர்த்தும், பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதியினருக்கான (EWS) 10 சதவீத இட ஒதுக்கீட்டை கண்டித்தும் திராவிடர் கழகம் சார்பில் நடத்தப்படவிருந்த மிதிவண்டிப் பேரணிக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதற்கு திராவிட இயக்கத் தமிழர் பேரவைத் தலைவர் சுப. வீரபாண்டியன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.


கண்டன அறிக்கையின் விவரம்
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையின் விவரம்: “பெரியாரையும், அம்பேத்கரையும் தங்கள் கொள்கைத் தலைவர்களாக ஏற்றுக்கொண்டிருப்பதாகவும், நீட் தேர்வை எதிர்ப்பதாகவும் கூறிக்கொள்ளும் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியில், இதுபோன்ற பேரணிக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது.
கடந்த 17-ஆம் தேதியே பேரட்டிக்காக அனுமதி கோரி கடிதம் அளிக்கப்பட்டிருந்த நிலையில், கடைசி நேரத்தில் திடீரென தடை விதிப்பது எந்த வகையிலும் ஜனநாயக முறை ஆகாது. ஆசிரியர் (வீரமணி) தனது அறிக்கையில் குறிப்பிட்டது போல, சமூக நீதியில் கை வைப்பது என்பது அப்பட்டமான சமூக விரோதச் செயலாகும்.
தற்போதைய தமிழ்நாட்டில் நடப்பது தவெக ஆட்சியா அல்லது பாஜக ஆட்சியா என்ற கேள்வி எழுந்துள்ளது” என்று சுப. வீரபாண்டியன் தனது அறிக்கையில் கேள்வி எழுப்பியுள்ளார்.
டாஸ்மாக் முறைகேடு வழக்கு: செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கி உத்தரவு!
