spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்குழப்பத்தில் அதிமுக- வெளியான திடீர் அறிவிப்பு

குழப்பத்தில் அதிமுக- வெளியான திடீர் அறிவிப்பு

-

- Advertisement -

குழப்பத்தில் அதிமுக- வெளியான திடீர் அறிவிப்பு

ஏப்ரல் 7ம் தேதி நடைபெறவிருந்த அதிமுக செயற்குழு கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அதிமுக தலைமை நிர்வாகம் அறிவித்துள்ளது.

EPS - எடப்பாடி பழனிசாமி

மாவட்ட செயலாளர்கள் கூட்டத்துக்கு பதில் செயற்குழு கூட்டம் நடைபெறும் என நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது செயற்குழுவும் ரத்து என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ஒப்புதலின்பேரில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அதிமுக செயற்குழு கூட்டம் 7.4.2023 அன்று நடைபெறும் என ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. ஒருசில காரணங்களால் அன்றைய தினம் நடைபெறுவதாக இருந்த செயற்குழு கூட்டம் ரத்து செய்யப்படுகிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ