- Advertisement -
நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடி திருச்சி தாராசுரம் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர்.
விக்னேஷ் சிவன் நயன்தாரா தம்பதிக்கு கடவுள் பக்தி ஏராளம் என்பது அனைவர்க்கும் தெரியும். இருவரும் எதாவது கோவிகளில் சாமி தரிசனம் செய்வதை நாம் அடிக்கடி. காணலாம்.

இந்நிலையில் தற்போது கும்பகோணம் அடுத்த தாராசுரம் பகுதியில் உள்ள ஐராவதேஸ்வரர் கோயிலில் விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா சாமி தரிசனம் செய்துள்ளனர். மேலும் அங்கிருந்த கல்லூரி மாணவர்கள் இருவருடன் ஆசையாக புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர்.
சில மாதங்களுக்கு நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஜோடி வாடகைத் தாய் மூலம் இரட்டை குழந்தை பெற்றனர். சமீபத்தில் விக்னேஷ் சிவன் தன் குழந்தைகளுக்கு வைத்துள்ள பெயரை வெளிப்படுத்தினார்.

ஒரு குழந்தையின் பெயர் உயிர் ருத்ரோநீல் N சிவன் என்றும், மற்றொரு குழந்தையின் உலக் தெய்விக் N சிவன் என்று குறிப்பிட்டுள்ளார். இருவரின் பெயரில் உள்ள N என்ற எழுத்து உலகிலே சிறந்த அம்மாவான அவர்களின் அம்மா பெயரைக் குறிப்பது என்றும் தெரிவித்தார்.
நயன்தாரா தற்போது அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வரும் ஜவான் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். அந்தப் படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.