Homeசெய்திகள்சினிமாஆசைக் குழந்தைகளுக்கு என்ன பெயர்... முதன்முறையா போட்டோ உடன் வெளிப்படுத்திய விக்னேஷ் சிவன்!

ஆசைக் குழந்தைகளுக்கு என்ன பெயர்… முதன்முறையா போட்டோ உடன் வெளிப்படுத்திய விக்னேஷ் சிவன்!

-

இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது குழந்தைகளுக்கு வைத்துள்ள பெயரை வெளியிட்டுள்ளார்.

சில மாதங்களுக்கு நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஜோடி வாடகைத் தாய் மூலம் இரட்டை குழந்தை பெற்றனர். அது இந்தியா முழுவதும் பெரும் பேசு பொருளானது.

nayanthara-sons.jpg

குழந்தைகள் பிறந்தது முதல் அவர்கள் முகம் வெளியுலகத்திற்கு தெரியாமல் காத்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது விக்னேஷ் சிவன் தன் குழந்தைகளுக்கு வைத்துள்ள பெயரை வெளிப்படுத்தியுள்ளார். அதனுடன் குழந்தைகளின் முகத்தையும் வெளியுலகிற்கு முதல்முறையாக காட்டியுள்ளார்.

ஒரு குழந்தையின் பெயர் உயிர் ருத்ரோநீல் N சிவன் என்றும், மற்றொரு குழந்தையின் உலக் தெய்விக் N சிவன் என்று குறிப்பிட்டுள்ளார். “இருவரின் பெயரில் உள்ள N என்ற எழுத்து உலகிலே சிறந்த அம்மாவான அவர்களின் அம்மா பெயரைக் குறிப்பது. இது எங்களுக்கு வாழ்வின் மிக மகிழ்ச்சியான மற்றும் முக்கியமான தருணம்” என்று தெரிவித்துள்ளார்.

 

MUST READ