spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஎமோஷனல் காட்சிகளில் கண்கலங்க வைக்கும் சூரி.... 'மாமன்' பட டிரைலர் வெளியீடு!

எமோஷனல் காட்சிகளில் கண்கலங்க வைக்கும் சூரி…. ‘மாமன்’ பட டிரைலர் வெளியீடு!

-

- Advertisement -

சூரி நடிக்கும் மாமன் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.எமோஷனல் காட்சிகளில் கண்கலங்க வைக்கும் சூரி.... 'மாமன்' பட டிரைலர் வெளியீடு!

சூரி நடிப்பில் தற்போது மாமன் எனும் திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தை விலங்கு வெப் தொடரை இயக்கிய பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கியுள்ளார். லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க ஹேஷம் அப்துல் வாகப் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். தினேஷ் புருசோத்தமன் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். இந்த படத்தில் சூரியுடன் இணைந்து ராஜ் கிரண், ஐஸ்வர்யா லட்சுமி, சுவாசிகா, பாபா பாஸ்கர், பால சரவணன், கீதா கைலாசம் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படமானது குடும்ப பின்னணியில் உருவாகி இருக்கிறது. ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் படத்திலிருந்து அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் வருகின்ற மே மாதம் 16ஆம் தேதி படம் திரைக்கு வர தயாராகி வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்தின் தலைப்பை பார்க்கும் போதே தாய்மாமனுக்கும், மருமகனுக்கும் இடையிலான பாசப்பிணைப்பை வைத்து இப்படம் பேசுகிறது என்பது தெரிந்தது. அதேபோல் இந்த ட்ரெய்லரில் நடிகை சுவாசிகா, சூரியின் அக்காவாக நடித்துள்ளார். சுவாசிகாவிற்கு பிறக்கும் குழந்தை மீது அளவுக்கு அதிகமான பாசம் வைத்திருக்கிறார் சூரி.

we-r-hiring

இருப்பினும் குடும்பத்தில் வரும் ஏதோ ஒரு பிரச்சனையினால் தாய் மாமனும், மருமகனும் பிரியும் ஒரு நிலை ஏற்படுகிறது. இதன் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை போல் தெரிகிறது. இந்த ட்ரெய்லரிலேயே எமோஷனல் காட்சிகளில் கண் கலங்க வைத்துள்ளார் சூரி. எனவே இணையத்தில் வைரலாகி வரும் இந்த ட்ரெய்லர் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருப்பதோடு மட்டுமல்லாமல், இந்த படம் சூரியின் அடுத்த வெற்றி படமாக அமையும் என்ற நம்பிக்கையையும் ஏற்படுத்தியிருக்கிறது.

MUST READ