சிவகார்த்திகேயனின் மதராஸி பட லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் தற்போது தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் வெளியான ‘அமரன்’ திரைப்படம் இவரை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது. எனவே இவருடைய அடுத்தடுத்த படங்களின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அந்த வகையில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘மதராஸி’ படத்தின் மீதான எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த படம் 2025 செப்டம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. அதற்கான முழு ஏற்பாடுகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இந்த படத்தில் இருந்து லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஏ.ஆர். முருகதாஸ் தன்னுடைய ஒவ்வொரு படங்களிலுமே ஹீரோக்களின் ரொமான்டிக் பக்கத்தையும் மிக அழகாக காட்டுவார். அதேபோல் இப்படத்தில் சிவகார்த்திகேயனையும் வேறொரு பரிமாணத்தில் காட்டியிருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மினி வசந்த் நடிக்க இவர்களுடன் இணைந்து வித்யூத் ஜம்வால், விக்ராந்த், சபீர் கல்லாரக்கல், பிஜு மேனன் ஆகியோர் நடித்துள்ளனர். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.