சென்னை மேயர் பிரியா மீது, சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

மாண்டஸ் புயலினால் பாதிக்கப்பட்ட காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் சேதமடைந்த மீனவர்களின் விசைப்படகுகளை கடந்த சனிக்கிழமை காலை தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் கே.என் நேரு, சேகர்பாபு மேயர் ப்ரியா, துணை மேயர் மகேஷ் குமார், சட்டமன்ற உறுப்பினர் ஜே ஜே எபிநேசர், மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது முதலமைச்சர் கான்வாய் வாகனம் முன்பு பாதுகாப்பு போலீசாரின் காரில் தொங்குவது போல சென்னை மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி உள்ளிட்டோர் தொங்கியவாறு சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் சென்னை மேயர் பிரியா மீது, சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர் செல்வக்குமார் என்பவர் புகார் அளித்துள்ளார். அதில் மோட்டார் வாகனச் சட்டம் 1988 இன் பிரிவு- 83க்கு கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரி வலியுறுத்தியுள்ளார். சட்டத்தை மீறி ஆபத்தை உணராமல் சாலை விதிகளை காற்றில் பறக்கவிடப்பட்டதாக அவர் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.