தமிழ்நாட்டு மகளிருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் தந்த உறுதிமொழிதான் கலைஞர் உரிமைத்தொகை. இதற்கு யார் தடை ஏற்படுத்தினாலும் அதிலிருந்து பின்வாங்க மாட்டேன் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளாா். 
இது குறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள காணொளியில் கூறியிருப்பதாவது, ”தேர்தலைக் காரணம் காட்டி, பாரதிய ஜனதா கட்சி மூன்று மாதங்களுக்கான உரிமைத்தொகையை முடக்கப் பார்க்கிறது. இதில் முந்திக்கொண்டது நமது திராவிட மாடல் அரசு. பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3 ஆயிரம் + கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ.2 ஆயிரம் என்று 1 கோடியே 31 லட்சம் குடும்ப தலைவிக்கு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளுக்கு இன்று காலை 5 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டிருக்கிறது.

வெல்லும்_தமிழ்ப்_பெண்கள் ஆதரவோடு அடுத்தும் நாங்கள்தான் வெல்வோம். திராவிட மாடல் 2.0-இல் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகையை 2 ஆயிரமாக உயர்த்தி வழங்குவோம். இது, என் சகோதரிகளுக்கு இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கொடுக்கும் வாக்குறுதி. வெல்வோம்_ஒன்றாக” இவ்வாறு முதலமைச்சர் தெரிவித்துள்ளாா்.
தி.மு.கவிற்குப் போட்டி எதிர்க்கட்சி இல்லை, உதயநிதியின் இளைஞரணிதான்! வே. மதிமாறன் புகழாரம்!


