Homeசெய்திகள்தமிழ்நாடுஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சிபிஐ அதிகாரப்பூர்வமாக எஃப்.ஐ.ஆர். பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது!

ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சிபிஐ அதிகாரப்பூர்வமாக எஃப்.ஐ.ஆர். பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது!

-

- Advertisement -

பகுஜன் சமாஜ் கட்சியின் (பிஎஸ்பி) தமிழக மாநில தலைவராக இருந்த ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட வழக்கை மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) அதிகாரப்பூர்வமாக மறுபதிவு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது.

we-r-hiring

பின்னணி மற்றும் செம்பியம் காவல் நிலைய நடவடிக்கை

கடந்த 2024-ஆம் ஆண்டு ஜூலை 5-ஆம் தேதி இரவு, பெரம்பூர் வேணுகோபால் சாமி கோவில் தெருவில் தனது புதிய வீட்டின் கட்டுமானப் பணிகளைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த ஆர்ம்ஸ்ட்ராங், மர்மக் கும்பலால் கொடூரமாகத் தாக்கப்பட்டு உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்துச் செம்பியம் காவல் நிலையத்தில் ஆரம்பத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு மாநில காவல்துறையினரால் விசாரணை நடத்தப்பட்டு, குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

உச்சநீதிமன்ற உத்தரவும் சிபிஐ எஃப்.ஐ.ஆர்-ரும்

எனினும், மாநில காவல்துறையின் விசாரணையில் திருப்தியடையாத குடும்பத்தினர் தொடர்ந்த வழக்குகளின் அடிப்படையில், உச்சநீதிமன்றத்தின் உத்தரவிற்கிணங்க இந்த வழக்கு சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, முந்தைய குற்றப்பத்திரிகை ரத்து செய்யப்பட்டு, ஆர்ம்ஸ்ட்ராங்கின் சகோதரர் அளித்த புகாரின் அடிப்படையில் சிபிஐ புதிய முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்துள்ளது.

சம்பவ இடத்தில் சிபிஐ நேரடி விசாரணை

தற்போது கொலைச் சம்பவம் நடந்த வேணுகோபால் சாமி தெருவிற்கு நேரில் சென்ற சிபிஐ அதிகாரிகள், சம்பவ இடத்தைப் பார்வையிட்டு விசாரணையை முதற்கட்டத்திலிருந்து தீவிரமாகத் தொடங்கியுள்ளனர்.

தமிழ்நாட்டின் கழுத்தை நெரிக்கும் அரசியல் மாயைகள்! – மருது அழகராஜ் பேட்டியால் வெடித்த அரசியல் புயல்!

MUST READ