spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபிரேம்ஜி வீட்டில் வளைகாப்பு நிகழ்ச்சி.... வைரலாகும் புகைப்படங்கள்!

பிரேம்ஜி வீட்டில் வளைகாப்பு நிகழ்ச்சி…. வைரலாகும் புகைப்படங்கள்!

-

- Advertisement -

பிரேம்ஜி வீட்டில் வளைகாப்பு நிகழ்ச்சி நடந்துள்ளது.பிரேம்ஜி வீட்டில் வளைகாப்பு நிகழ்ச்சி.... வைரலாகும் புகைப்படங்கள்!

பிரபல இசையமைப்பாளரும், இயக்குனரும், நடிகருமான கங்கை அமரனின் மகன் பிரேம்ஜி அமரன் கடந்த 2003 ஆம் ஆண்டில் சினிமாவில் தனது பயணத்தை தொடங்கினார். அந்த வகையில் இவர் நடிகராகவும், பாடகராகவும், இசையமைப்பாளராகவும் வலம் வருகிறார். அதாவது வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சென்னை 600028, கோவா, மங்காத்தா உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். பிரேம்ஜி வீட்டில் வளைகாப்பு நிகழ்ச்சி.... வைரலாகும் புகைப்படங்கள்!கார்த்தி, சிம்பு உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். மேலும் சத்திய சோதனை, வல்லமை ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார் பிரேம்ஜி. இதற்கிடையில் 45 வயது வரை முரட்டு சிங்கிளாக சுற்றித்திரிந்த பிரேம்ஜி கடந்த ஆண்டு இந்து என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பிரேம்ஜி வீட்டில் வளைகாப்பு நிகழ்ச்சி.... வைரலாகும் புகைப்படங்கள்!இவர்களின் திருமணம் திருத்தணியில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவர்களின் முதலாம் ஆண்டு திருமண நாள் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் பிரேம்ஜி மனைவிக்கு வளைகாப்பு நடைபெற்றுள்ளது.பிரேம்ஜி வீட்டில் வளைகாப்பு நிகழ்ச்சி.... வைரலாகும் புகைப்படங்கள்! இந்த நிகழ்ச்சி மிகவும் எளிமையாக நடந்துள்ளது. இந்நிகழ்ச்சிக்கு நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் நேரில் சென்று பிரேம்ஜி மற்றும் அவரது மனைவியை வாழ்த்தியுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ