spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபிரபு சாலமனின் 'கும்கி 2'.... விரைவில் வெளியாகும் அப்டேட்!

பிரபு சாலமனின் ‘கும்கி 2’…. விரைவில் வெளியாகும் அப்டேட்!

-

- Advertisement -

கும்கி 2 படத்தின் அப்டேட் விரைவில் வெளியாக இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.பிரபு சாலமனின் 'கும்கி 2'.... விரைவில் வெளியாகும் அப்டேட்!

கடந்த 2012 ஆம் ஆண்டு பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் கும்கி. இந்த படத்தில் விக்ரம் பிரபு கதாநாயகனாக அறிமுகமாகி இருந்தார். இவருடன் இணைந்து தம்பி ராமையா, லட்சுமி மேனன் மற்றும் பலர் நடித்திருந்தனர். ஹீரோவுக்கும், யானைக்கும் இடையிலான பாசப்பிணைப்பை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. பிரபு சாலமனின் 'கும்கி 2'.... விரைவில் வெளியாகும் அப்டேட்!இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்களும் இன்றுவரையிலும் பலருக்கும் ஃபேவரைட்டாக அமைந்திருக்கிறது. மேலும் கடந்த 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் பிரபு சாலமன் ‘கும்கி 2’ படத்தினை இயக்கி வருவதாகவும், வேறு நடிகர்கள் இந்த படத்தில் நடிப்பதாகவும், தாய்லாந்தில் படப்பிடிப்பு நடந்து வருவதாகவும் பேச்சு அடிபட்டது. ஆனால் அதே சமயத்தில் பிரபு சாலமன், ‘கும்கி 2’ படத்தில் நடிக்க கதாநாயகி கிடைக்கவில்லை என்றும் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். அதன் பிறகு இந்த படம் குறித்த தகவல் எதுவும் வெளிவரவில்லை.பிரபு சாலமனின் 'கும்கி 2'.... விரைவில் வெளியாகும் அப்டேட்! இந்நிலையில் பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கும்கி 2 தொடர்பான புதிய அப்டேட் கிடைத்திருக்கிறது. அதன்படி இந்த படம் குறித்த அப்டேட் விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது. அடுத்தது விக்ரம் பிரபுவே இந்த படத்தில் ஹீரோவாக நடிக்கிறாரா? அல்லது வேறு யாரேனும் ஹீரோவாக நடிக்கிறார்களா? என்பது போன்ற தகவல்களும் விரைவில் வெளியாகும் என நம்பப்படுகிறது.

MUST READ