spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஇந்த மாதம் வெளியாகும் அப்டேட்கள் என்னென்ன?.... மிகுந்த எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

இந்த மாதம் வெளியாகும் அப்டேட்கள் என்னென்ன?…. மிகுந்த எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

-

- Advertisement -

இந்த மாதம் வெளியாகும் அப்டேட்கள்.இந்த மாதம் வெளியாகும் அப்டேட்கள் என்னென்ன?.... மிகுந்த எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

இன்று (அக்டோபர் 1) ஆயுத பூஜையை முன்னிட்டு தனுஷின் ‘இட்லி கடை’ திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ திரைப்படம் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகியுள்ளது. நாளை (அக்டோபர் 2) ரிஷப் ஷெட்டியின் ‘காந்தாரா சாப்டர் 1’ திரைப்படம் வெளியாக இருக்கிறது.இந்த மாதம் வெளியாகும் அப்டேட்கள் என்னென்ன?.... மிகுந்த எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

we-r-hiring

இது தவிர இன்னும் சில அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்க இருக்கிறது. அந்த வகையில் அஜித் – ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகும் ஏகே 64 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக இருக்கிறது. படக்குழுவினரிடமிருந்து இது தொடர்பான அப்டேட் விரைவில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த மாதம் வெளியாகும் அப்டேட்கள் என்னென்ன?.... மிகுந்த எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

அடுத்தது சூர்யாவின் 45 ஆவது படமான கருப்பு திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பும், முதல் பாடலும் இந்த மாதத்தில் வெளியாகும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அடுத்தது விஜயின் ஜனநாயகன் படத்தின் முதல் பாடலும் இந்த மாதத்தில் தான் வெளியாக இருக்கிறது. அனேகமாக தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியாகும் என நம்பப்படுகிறது.இந்த மாதம் வெளியாகும் அப்டேட்கள் என்னென்ன?.... மிகுந்த எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

இதற்கிடையில் வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்க உள்ள புதிய படத்தின் (STR 49) புதிய ப்ரோமோ வருகின்ற அக்டோபர் 4 அன்று வெளிவரும் என ஏற்கனவே படக்குழு அறிவித்துள்ளது.

‘வீர தீர சூரன்’ படத்திற்குப் பிறகு விக்ரமின் அடுத்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இந்த மாதம் வெளியாகும் என நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இந்த மாதம் வெளியாகும் அப்டேட்கள் என்னென்ன?.... மிகுந்த எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

மேலும் பிரதீப் ரங்கநாதனின் டியூட், மாரி செல்வராஜின் பைசன், ஹரிஷ் கல்யாணின் டீசல் ஆகிய படங்கள் வருகின்ற அக்டோபர் 17ஆம் தேதி தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. எனவே இந்த படங்கள் தொடர்பான அப்டேட்டுகளும் இனிவரும் நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு பல பெரிய நடிகர்களின் படங்கள் தொடர்பான அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாக இருப்பதால் அதனை கொண்டாட மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ