கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் பயோபிக் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.
இலங்கையைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் சிறந்த பந்துவீச்சாளர். அவர் தனது வாழ்நாளில் 800-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இந்நிலையில் 800 என்ற பெயரில் அவரது வாழ்க்கை திரைப்படமாக உருவாகிறது.


இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி தான் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் முதலில் நடிப்பதாக இருந்தது. அதற்கான போஸ்டர் மற்றும் அவரின் தோற்றம் உள்ளிட்டவை வெளியாகின. ஆனால் இலங்கைப் போரில் தமிழர் படுகொலையின் போது இலங்கை அரசுக்கு ஆதரவாக நின்ற முத்தையாவின் வாழ்க்கைப் படத்தில் தமிழ் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பதா? என்ற வகையில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது.

இதனால் விஜய் சேதுபதி இந்தப் படத்தில் இருந்து விலகினார். தற்போது வேறு ஒரு நடிகரை வைத்து இந்தப் படம் உருவாகி வருகிறது. மாதுர் மிட்டல் என்ற நடிகர் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தற்போது இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி உள்ளது.
