spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாசூது கவ்வும் 2-ம் பாகத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி!?

சூது கவ்வும் 2-ம் பாகத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி!?

-

- Advertisement -

சூது கவ்வும் 2ஆம் பாகத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, சஞ்சிதா ஷெட்டி, அசோக் செல்வன், சிம்ஹா உள்ளிட்டோர் நடிப்பில் 2013 ஆம் ஆண்டு சூது கவ்வும் திரைப்படம் வெளியானது.

we-r-hiring

தமிழ் சினிமாவின் டார்க் ஹியூமர் கதைக்களத்தை கொண்டு வந்து வெற்றி பெற்றவர் நலன் குமாரசாமி. வளர்ந்து வந்த விஜய் சேதுபதிக்கு இந்தப் படம் திருப்புமுனையாக அமைந்தது.

சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்தப் படத்திற்கென தனி ரசிகர் பட்டாளம் உள்ளனர். இந்நிலையில் சூது கவ்வும் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது.

சூது கவ்வும் 2-ம் பாகத்தில் விஜய் சேதுபதி கதாநாயகியாக நடிக்கவில்லை. மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடிக்கிறார். ஆனாலும் இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது விஜய் சேதுபதி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

படத்தின் மற்ற நடிகர்கள், அதிகாரப்பூர்வ அறிவிப்பு உள்ளிட்டவை விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ