spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஇது அசத்தலான காம்போ💥 விஜய் சேதுபதியின் 50-வது படம்... இயக்குனர் யார் தெரியுமா?

இது அசத்தலான காம்போ💥 விஜய் சேதுபதியின் 50-வது படம்… இயக்குனர் யார் தெரியுமா?

-

- Advertisement -

நடிகர் விஜய் சேதுபதியின் 50-வது படம் குறித்த அப்டேட் கிடைத்துள்ளது.

விஜய் சேதுபதி தற்போது தமிழ் சினிமாவின் ஸ்டார் நடிகராக உருவெடுத்துள்ளார். ஹீரோ என்ற எல்லையை உடைத்து நல்ல கதை என்றால் எந்த கதாபாத்திரத்திலும்  நடிப்பதற்கு எப்போதும் தயாராக இருப்பார் விஜய் சேதுபதி.

we-r-hiring

அதனால் ஹீரோயிசம் என்ற எல்லைக்குள் தன்னை நிறுத்திக் கொள்ளாமல் நடிப்பு என்ற பரந்து விரிந்த உலகத்தில் தொடர்ந்து வருகிறார். தமிழ் தாண்டி தெலுங்கு, மலையாளம், இந்தி என பான் இந்தியா நடிகராக தற்போது உருவெடுத்துள்ளார்.

இந்நிலையில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாக இருக்கும் 50-வது படம் குறித்த அப்டேட் கிடைத்துள்ளது. இந்தப் படத்தை ‘குரங்கு பொம்மை’ படத்தின் இயக்குனர் நிதிலன் சுவாமிநாதன் இயக்க இருக்கிறார். படத்திற்கு ‘மகாராஜா‘ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் விஜய் சேதுபதி வித்தியாசமான தோற்றத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்தப் படம் இருக்கும் பேமிலி எமோஷனல் படமாக உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

MUST READ