spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாமன்சூர் அலிகான் கதாநாயகனாக களமிறங்கும் 'சரக்கு'... போஸ்டரை வெளியிட்ட விஜய் சேதுபதி!

மன்சூர் அலிகான் கதாநாயகனாக களமிறங்கும் ‘சரக்கு’… போஸ்டரை வெளியிட்ட விஜய் சேதுபதி!

-

- Advertisement -

மன்சூர் அலிகான் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை  விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.

we-r-hiring

தமிழ் சினிமாவில் பெயர் போன வில்லன் நடிகராக வலம் வந்தவர் மன்சூர் அலிகான்.  தற்போது சில படங்களில் மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘லியோ’ படத்திலும், பிக்பாஸ் அமீர் கதாநாயகனாக அறிமுகமாகம் புதிய படத்திலும் மன்சூர் அலிகான் நடித்து வருகிறார்.

இந்நிலையில் மன்சூர் அலிகான் கதாநாயகனாக புதிய படத்தில் நடித்து வருகிறார். படத்திற்கு ‘சரக்கு’ என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் வலினா பிரின்ஸ் என்பவர் கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் மொட்டை ராஜேந்திரன், கோதண்டம், கிங்ஸ் லீ, தீனா, லொள்ளு சபா மனோகர், மதுமிதா, வினோதினி லியாகத் அலிகான், பயில்வான் ரங்கநாதன், பாரதி கண்ணன் உள்ளிட்ட பலரும் இந்தப் படத்தில் நடிக்கின்றனர்.

தற்போது ‘சரக்கு’ படத்தின் போஸ்டரை விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். அவர் போஸ்டரை வெளியிட மன்சூர் அலிகான் பெற்றுக்கொண்டார்.

MUST READ