இயக்குனர் மாரி செல்வராஜ் ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ். இவருடைய இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், வாழை ஆகிய படங்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அடுத்ததாக இவர் பைசன் திரைப்படத்தையும் இயக்கியுள்ளார். துருவ் விக்ரமின் நடிப்பில் உருவாகியிருந்த இந்த படம் கடந்த அக்டோபர் 17ஆம் தேதி உலகம் முழுவதும் திரையிடப்பட்டது. இந்தப் படத்தை பா. ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனமும், அப்பிளாஸ் என்டேர்டெயின்மென்ட் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்திருக்கிறார்.
இந்த படமானது கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வெற்றி நடைபோட்டு வருகிறது. இருப்பினும் சிலர் இந்த படத்தை விமர்சித்து வருகின்றனர். அதே சமயம் திருநெல்வேலியில் ராம் சினிமாஸ் திரையரங்கில் பைசன் படத்தை பார்க்க வந்த ரசிகர்கள் சாதிக்கொடியை ஏந்தி வந்தது பரபரப்பை கிளப்பியது. எனவே திருநெல்வேலியில் ரசிகர்களுடன் பைசன் படத்தை பார்த்த மாரி செல்வராஜ், படம் முடிந்த பின்னர் ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
“I didn’t give you alcohol🍻. I have given you books (#Bison)📚. Don’t dance like drunkards. Be Happy♥️”
– #MariSelvaraj pic.twitter.com/qvx6qsw3jB— AmuthaBharathi (@CinemaWithAB) October 21, 2025

அதன்படி அவர், “நான் உனக்கு சாராயம் கொடுக்கல கத்துறதுக்கு. நான் உனக்கு கொடுத்திருப்பது புத்தகம். என்னுடைய படம் ஒரு புத்தகமாக இருக்க வேண்டும் என்று தான் விரும்புகிறேன். தயவுசெஞ்சு சாராயம் குடிச்ச மாதிரி ஆடாத” என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


