Homeசெய்திகள்கட்டுரைபீகாரை அடுத்து தமிழகம்... 41 இடங்களுக்கு குறி... களமிறங்கிய பாஜக! உமாபதி Detail Report!

பீகாரை அடுத்து தமிழகம்… 41 இடங்களுக்கு குறி… களமிறங்கிய பாஜக! உமாபதி Detail Report!

-

- Advertisement -

எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் 41 தொகுதிகளை பாஜக குறிவைத்துள்ளதாகவும், அந்த தொகுதிகளில் பல்வேறு விதமான மோசடிகளை செய்து பாஜக கண்டிப்பாக வெற்றி பெற்றுவிடும் என்றும் மூத்த பத்திரிகையாளர் உமாபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

we-r-hiring

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டில் பாஜகவின் தேர்தல் செயல்திட்டம் என்ன என்பது குறித்து மூத்த பத்திரிகையாளர் உமாபதி யூடிபில் வெளியிட்டுள்ள காணொலி பதிவில் தெரிவித்துள்ளதாவது :-  பீகார் சட்டமன்றத் தேர்தல் வெற்றியை தொடர்ந்து, பாஜக தமிழ்நாட்டில் ஆட்சியை கைப்பற்ற பல்வேறு திட்டங்களை கடந்த சில ஆண்டுகளாகவே செயல்படுத்தி வருகிறது. 2024 மக்களவை தேர்தலுக்கு முன்பாகவே அந்த திட்டங்களை எல்லாம் செயல்படுத்தி கோவை உள்ளிட்ட பல தொகுதிகளில் பாஜக 2-வது இடத்தை பிடித்திருந்தது. கடந்த காலங்களில் அரசியல் கட்சிகள் கள்ள ஓட்டுகள் போடுவது வழக்கமானது தான். அதுவும் குறைந்த அளவில் தான் கள்ளஓட்டுகள் போட முடியும்.

ஆனால், தற்போது ஒட்டுமொத்தமாக மாநிலத்தையே திருடும் முறையை தான் பீகாரில் பாஜக அறிமுகம செய்தது. அதில் ஒன்று உலக வங்கியில் ரூ.14000 கடன் வாங்கி ஒரு கோடியே 20 லட்சம் பெண்களுக்கு தலா ரூ.10,000 வழங்கினார்கள். அதன் காரணமாக என்டிஏ கூட்டணிக்கு கணிசமான வாக்குகள் விழுந்தன. அதன் பிறகு, எண்ணிக்கையே 25 ஆயிரத்தில் இருந்து தான் தொடங்கியது. இதனால் மோடி – நிதிஷ்குமார் கூட்டணி வரலாறு காணாத வெற்றியை பெற்றது. வாக்கு சேகரிக்க சென்ற நிதிஷ் கட்சியினர் மீது மக்கள் சாணியால் தாக்கிய நிலையில், அவர்களின் கட்சி 87 இடங்களில் வந்துவிட்டதா என்பது நம்புகிற விதமாக இல்லை.

இந்நிலையில், பீகாரில் இந்த பாணி அரசியல் வெற்றி பெற்றுள்ளதால், அதேபோல் தமிழ்நாட்டில் 41 இடங்களில் வெற்றி பெற நாள், நேரம் குறித்து வைத்துள்ளனர். இந்த மோசடியை 4 விதமாக அரங்கேற்ற பாஜக திட்டமிட்டிருக்கிறது. முதலாவது வடநாட்டை சேர்ந்த தொழிலாளர்களை வாக்காளர்களாக சேர்ப்பது. இதற்காக 9  தொகுதிகளை தேர்வு செய்துள்ளனர். இரண்டாவது சிறுபான்மை மக்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவது. எஸ்.ஐ.ஆர். நடவடிக்கை மூலம் அவர்கள் சிறுபான்மை மக்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவார்கள். இந்த பணிகளை 9 முதல் 10 தொகுதிகளில் உள்ள கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களை நீக்குவார்கள். மூன்றாவது வழிமுறை வாக்காளர்களுக்கு பணம் விநியோகிப்பது. 4வது பெட்டியை மாற்றுவதாகும். இந்த முறைகேடுகளையும்  ஒரே நேரத்தில் நிறைவேற்ற திட்டமிட்டுள்ளனர்.

அதிமுக - பாஜக

முதலாவது திட்டத்தின்படி வடமாநில தொழிலாளர்கள் அதிகமுள்ள பூந்தமல்லி, ராயபுரம், எழும்பூர், கோவை வடக்கு, கோவை தெற்கு, திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு உள்ளிட்ட பகுதிகளை தான் பாஜக குறிவைத்துள்ளனர். இந்த இடங்களில் தொகுதிக்கு 25 ஆயிரம் முதல் 35 ஆயிரம் பேர் வரை வடமாநில தொழிலாளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க உள்ளனர். அடுத்தபடியாக கிறிஸ்தவ சிறுபான்மையினர் அதிகம் உள்ள தொகுதிகள் தூத்துக்குடி, நெல்லை, பாளையங்கோட்டை, விலவங்கோடு, கிள்ளியூர், குளச்சல், பத்மநாபபுரம், நீலகிரி, கூடலூர் ஆகும். இந்த தொகுதிகளில் கிறிஸ்தவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க திட்டமிட்டுள்ளனர். அடுத்தபடியாக இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் இடங்கள் ராமநாதபுரம், ஆலங்குடி, பட்டுக்கோட்டை, வாணியம்பாடி, நாகை, ஸ்ரீவைகுண்டம், அரவக்குறிச்சி, குன்னம் ஆகும். இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக உள்ள இந்த தொகுதிகளிலும் அவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க திட்டமிட்டிருக்கிறார்கள்.

அடுத்தபடியாக திமுக, விசிகவுக்கு வாக்களிக்கக் கூடிய பட்டியல் இன மக்களை நீக்குவதாகும். இது பரமக்குடி, மதுராந்தகம், செய்யூர், விருதாச்சலம், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, திருத்துறைப்பூண்டி, நன்னிலம், திருவாரூர், கீழ் வேளுர், ஒட்டப்பிடாரம் ஆகிய இடங்களாகும். இங்கே பட்டியல் இன மக்களின் வாக்குகளை நீக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. எனவே இந்த தொகுதிகளை வேறு எந்த தொகுதியிலும் பிரச்சினை ஏற்படப் போவது கிடையாது. 234 தொகுதிகளில் பாஜக 41 இடங்களில் தான் மோசடியை அரங்கேற்ற திட்டமிட்டுள்ளது. மற்ற இடங்களில் வாக்காளர்களை நீக்கினாலும், அழுத்தம் கொடுத்து மீண்டும் அவர்களின் பெயர்களை சேர்த்து விடுவார்கள்.

பாஜகவை பொருத்தவரை 2029 மக்களவை தேர்தல் தான் முக்கியம். எனவே இம்முறை 41 இடங்களில் மட்டும் வென்றால் போதும். அதிமுக 80 இடங்கள் வரை வென்றால், அவர்களுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்துவிடலாம் என திட்டமிட்டு வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பிட்ட 41 தொகுதிகளிலும் இந்து பெண்களின் வாக்குகளை வாங்குவதற்காக குத்துவிளக்கு பூஜைகள் நடத்துவார்கள். சிறுபான்மை மக்களுக்கு எதிராக இந்துக்களை தூண்டிவிட்டு பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். உறுதியாக இந்த 41 தொகுதிகள் பறிபோகும். அதேவேளையில் வாக்குக்கு ரூ.10,000 வழங்கிடவும் திட்டமிட்டிருக்கிறார்கள். அதுவும் குறிப்பிட்ட 41 தொகுதிகளில் மட்டும் செய்யலாமா? என்றும் யோசித்துக் கொண்டிருக்கிறார்கள், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

MUST READ