Homeசெய்திகள்சினிமா'சூர்யா 46' படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு இங்கதானா?

‘சூர்யா 46’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு இங்கதானா?

-

- Advertisement -

சூர்யா 46 படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.'சூர்யா 46' படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு இங்கதானா?

சூர்யா நடிப்பில் தற்போது ‘கருப்பு’ திரைப்படம் உருவாகி வருகிறது. அதாவது ஏற்கனவே இதன் படப்பிடிப்புகள் ஏறத்தாழ நிறைவடைந்த நிலையில் சமீபத்தில் இறுதி கட்ட படப்பிடிப்புகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதே வேளையில் சூர்யா, வாத்தி, லக்கி பாஸ்கர் ஆகிய படங்களை இயக்கி பிரபலமான வெங்கி அட்லுரி இயக்கத்தில் தனது 46வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க ஜி.வி. பிரகாஷ் இதற்கு இசையமைக்கிறார். இந்தப் படத்தில் சூர்யாவுடன் இணைந்து மமிதா பைஜு, ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே ஹைதராபாத், ஐரோப்பா போன்ற பகுதிகளில் நடைபெற்றது. இந்நிலையில் இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பு கோயம்புத்தூரில் நடைபெறும் என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. 'சூர்யா 46' படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு இங்கதானா?இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு ‘விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்’ என்று தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாகவும், இந்த படத்தின் டைட்டில் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகும் எனவும் பல தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.

MUST READ