Homeசெய்திகள்சினிமாரஜினியுடன் இணைந்து நடிக்கும் ஷாருக்கான்.... எந்தப் படத்தில் தெரியுமா?

ரஜினியுடன் இணைந்து நடிக்கும் ஷாருக்கான்…. எந்தப் படத்தில் தெரியுமா?

-

- Advertisement -

ரஜினியுடன் ஷாருக்கான் இணைந்து நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.ரஜினியுடன் இணைந்து நடிக்கும் ஷாருக்கான்.... எந்தப் படத்தில் தெரியுமா?

சூப்பர் ஸ்டார் என்று கோடான கோடி ரசிகர்களால் கொண்டாடப்படும் ரஜினி தற்போது அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி வருகிறார். அந்த வகையில் கமல்ஹாசன் தயாரிப்பில் ‘தலைவர் 173’ படத்திலும், கமல்ஹாசன் உடன் இணைந்து புதிய படம் ஒன்றிலும் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இதற்கிடையில் இவர், ‘ஜெயிலர் 2’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். கடந்த 2023 ஆம் ஆண்டு நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் அனிருத் இசையில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் இமாலய வெற்றி பெற்ற நிலையில் இதன் அடுத்த பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு ஆரம்பத்திலிருந்தே அதிகமாக இருந்து வருகிறது. அதன்படி படப்பிடிப்புகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.ரஜினியுடன் இணைந்து நடிக்கும் ஷாருக்கான்.... எந்தப் படத்தில் தெரியுமா? படமானது அடுத்த ஆண்டு ஜூன் மாதம் திரைக்கு வரும் என்று சொல்லப்படுகிறது. அதே சமயம் வருகின்ற டிசம்பர் 12ஆம் தேதி ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு ‘ஜெயிலர் 2’ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது. இது தவிர இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, மிர்னா மேனன் ஆகியோர் மட்டுமல்லாமல் மோகன்லால், சிவராஜ்குமார், எஸ்.ஜே. சூர்யா, சந்தானம், வித்யா பாலன் என ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்து வருவதாக தகவல் கசிந்து வருகின்றன. ரஜினியுடன் இணைந்து நடிக்கும் ஷாருக்கான்.... எந்தப் படத்தில் தெரியுமா?இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் ஷாருக்கானும் இணைந்திருப்பதாக சினிமா வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது. ரஜினியின் ‘கூலி’ படத்தில் அமீர்கான் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். அடுத்தது ‘ஜெயிலர் 2’ படத்தில் ஷாருக்கான் நடிக்க இருக்கும் தகவல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக அதிகப்படுத்தி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ