spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'ஏகே 64' ஷூட்டிங்கை அந்த மாசத்துக்குள்ள ஸ்டார்ட் பண்ணிடுவோம்.... ஆதிக் ரவிச்சந்திரன் பேட்டி!

‘ஏகே 64’ ஷூட்டிங்கை அந்த மாசத்துக்குள்ள ஸ்டார்ட் பண்ணிடுவோம்…. ஆதிக் ரவிச்சந்திரன் பேட்டி!

-

- Advertisement -

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் ஏகே 64 படத்தின் ஷூட்டிங் குறித்த தகவலை பகிர்ந்துள்ளார்.ஏகே 64 ஷூட்டிங்கை அந்த மாசத்துக்குள்ள ஸ்டார்ட் பண்ணிடுவோம்.... ஆதிக் ரவிச்சந்திரன் பேட்டி!

தமிழ் சினிமாவில் ஆதிக் ரவிச்சந்திரன் ‘திரிஷா இல்லனா நயன்தாரா’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன் பின்னர் இவர் இயக்கிய சில படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதேசமயம் அஜித்துடன் கூட்டணி அமைத்து ‘குட் பேட் அக்லி’ என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் அஜித் ரசிகர்களுக்கு தரமான விருந்து படைத்து அதிக வசூலை அள்ளியது. இதைத்தொடர்ந்து மீண்டும் அஜித்தை இயக்கும் வாய்ப்பு ஆதிக் ரவிச்சந்திரனுக்கு கிடைத்தது.ஏகே 64 ஷூட்டிங்கை அந்த மாசத்துக்குள்ள ஸ்டார்ட் பண்ணிடுவோம்.... ஆதிக் ரவிச்சந்திரன் பேட்டி! அதன்படி அஜித்தின் 64வது படமான அதாவது ‘ஏகே 64’ என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டுள்ள புதிய படத்தை ஆதித் ரவிச்சந்திரன் இயக்கப் போகிறார் என சமீபகாலமாக பல தகவல்கள் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி வருகின்றன. மேலும் இந்த படத்தின் ப்ரீ ப்ரோடக்ஷன் பணிகளும் ஏற்கனவே தொடங்கப்பட்டதாக ஆதிக் கூறியிருந்தார். அதன் பிறகு இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அஜித், கார் பந்தயத்தில் பிஸியாக இருப்பதால் இப்படம் தொடர்பான அறிவிப்பு 2026 ஜனவரி மாதத்திற்குள் வெளியாகும் எனக் கூறியுள்ளார் அஜித்.ஏகே 64 ஷூட்டிங்கை அந்த மாசத்துக்குள்ள ஸ்டார்ட் பண்ணிடுவோம்.... ஆதிக் ரவிச்சந்திரன் பேட்டி! ஆகையினால் அதன் பிறகு தான் படப்பிடிப்பு தொடங்கும் என பேச்சு அடிபட்டது. இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் படப்பிடிப்பு தொடர்பான அப்டேட்டை கொடுத்துள்ளார். அவர் சமீபத்தில் நடந்த பேட்டியில், “முன் தயாரிப்பு பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்டது. லொகேஷன் பார்த்துக் கொண்டிருக்கிறோம். படப்பிடிப்பை பிப்ரவரி மாதம் இறுதிக்குள் ஸ்டார்ட் பண்ணிடுவோம்” என்று தெரிவித்துள்ளார். இந்த தகவல் அஜித் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை தந்துள்ளது.

MUST READ