மலையாளத் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாக உள்ள நடிகை ஊர்வசியின் மகளின் சமீபத்திய புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
நடிகை ஊர்வசியின் மகள் தேஜலட்சுமி (குஞ்சாட்டா) மலையாளத் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார். அவரது சமீபத்திய புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன. நடிகர் மனோஜ் கே ஜெயன் – ஊர்வசி தம்பதியரின் மகளான இவர், ‘சுந்தரியாயவள் ஸ்டெல்லா’ (Sundariyayaval Stella) என்ற படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
நடிகை ஊர்வசியின் மூத்த மகள் தேஜலட்சுமி மலையாள சினிமாவில் நாயகியாக அறிமுகமாகிறார். ஊர்வசியின் மகள் சினிமாவில் நடிப்பதை அடுத்து, அவர் தனது அம்மா போலவே சிறந்த நடிகையாக வருவார் என்று ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில், தேஜலட்சுமியின் கிளாமரஸ் மற்றும் புதிய லுக் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. கமல்ஹாசனுடன் ஊர்வசி மற்றும் தேஜலட்சுமி எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் சமீபத்தில் பகிரப்பட்டன. ஊா்வசிக்கு இவ்வளவு பெரிய மகளா என தேஜலட்சுமியின் போட்டோவை சமூக வலைத்தளங்களில் பலரும் பகிா்ந்து வருகின்றனா்.


