spot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைவிஜயை விரட்டிய காங்கிரஸ்! கூட்டணிக்கு யாரும் வரல! தவெகவுக்கு சம்பவம் இருக்கு! தராசு ஷ்யாம் நேர்காணல்!

விஜயை விரட்டிய காங்கிரஸ்! கூட்டணிக்கு யாரும் வரல! தவெகவுக்கு சம்பவம் இருக்கு! தராசு ஷ்யாம் நேர்காணல்!

-

- Advertisement -

எஸ்.ஐ.ஆர் நடவடிக்கைக்கு பிறகு நடைபெற உள்ள 2026 சட்டமன்றத் தேர்தல் மதர் ஆப் ஆல் எலக்சன்ஸ் என்றும், தேர்தலின் தீவிரத்தை உணர்ந்து அதற்கு விஜய் கட்சியினரை தயார் படுத்த வேண்டும் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் நேர்காணல்:- தவெக தலைவர் விஜய் மக்களுடன் கூட்டணி என்று அறிவித்துள்ளார். கட்சி நிறுத்தும் வேட்பாளர்களுக்கு அனைத்து நிர்வாகிகளும் ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும். உங்களுக்குள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். தவெகவில் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்த வேண்டும்.  சிறிய கட்சிகளுக்கு ஒரு சில தொகுதிகளை கொடுத்த பின்னர் 220 தொகுதிகளிலாவது அவர்கள் போட்டியிட வேண்டும். குறைந்தபட்சம் ஒரு தொகுதிக்கு 10 கோடி ரூபாய் வேண்டும். 2000 கோடி இல்லாமல் போட்டிக்கான வாய்ப்புகளே இல்லை. இதன் மூலம் விஜய் என்ன சொல்ல வருகிறார் என்றால் வேட்பாளர்களை நிறுத்தப்போகிறவர்கள் பொருளாதார ரீதியாக வலிமையானவர்கள். கட்சியில் மூன்றாண்டுகளாக இருப்பவர்களுக்கு இடம் கிடைக்காவிட்டாலும் ஒற்றுமையாக பணியாற்றிட வேண்டும் என்று தான் நான் புரிந்துகொள்கிறேன்.

ஆனால் அப்படி ஒற்றுமையாக யாரும் வேலை பார்க்க மாட்டார்கள். திராவிட இயக்கம் அந்த காலத்தில் காங்கிரசை எதிர்த்து சாமானியர்களை தான் வேட்பாளர்களாக நிறுத்தியது. சாமானியர்களை நிறுத்தி வெற்றி பெற வைக்கிறபோது தான் விஜயின் தலைமை நிரூபணமாகும். உங்களில் ஒருவரை தான் தேர்தலில் நிறுத்த வேண்டும். ஆனால் அப்படியான ஒரு எண்ணம் விஜயிடம் இல்லை என்பது விஜயினுடைய பேச்சில் தெரிகிறது. இதற்கு முந்தைய பேச்சிலும் தெரிந்தது.

விஜய் தமிழகம் முழுவதும் பிரச்சாரத்திற்கு செல்ல மாட்டார் என்றும், ஒரு மாநாடு, மூன்று பொதுக்கூட்டம். அல்லது 5 பொதுக்கூட்டங்கள் நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படி செய்தால் கட்சியை மக்கள் மத்தியில் கொண்டுபோக முடியாது. விஜய் திருச்சியில் பிரச்சாரத்தை தொடங்கியது சரியாக இருந்தது. ஆனால் கரூரில் பின்னடைவு ஏற்பட்டது. அதற்கு பிறகு அவர்களால் ஒரு கூட்டத்தை திட்டமிடவே முடியவில்லை. பாண்டிச்சேரி சென்றார்கள். அங்கு தேர்தல் ஆணையம் அனுமதியே தரவில்லை.

அவர்கள் தமிழ்நாட்டில் மட்டும் தான் விசில் சின்னம் வாங்கினார்கள். புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளில் பலர் போட்டியிடுவார்களா? என்று தெரியாது. விஜய் நிற்பாரா? என்பதே கேள்வியாகும். ஒவ்வொரு தேர்தலும் வேறு வேறு தான். கடந்த தேர்தல் உதாரணம் இந்த தேர்தலுக்கு பொருந்தாது. நான் சொல்கிற 1967 உதாரணம் கூட 2026 தேர்தலுக்கு பொருந்தாது.

எதற்காக பழைய தேர்தல்களை நினைவுகூறுகிறோம் என்றால்? அரசியல் போக்கு இப்படி வந்துள்ளது என்று நினைவுபடுத்துவதற்காக தான். மற்றபடி ஒவ்வொரு தேர்தலும் வெவ்வேறு தான். அதுவும் எஸ்ஐஆருக்கு பிறகு நடைபெறும் 2026 தேர்தல், மதர் ஆஃப் ஆல் எலக்ஷ்ன்ஸ் ஆகும். அதில் மாற்றுக்கருத்துக்களே வைக்க வேண்டாம். எஸ்.ஐ.ஆரில் நிறைய குழப்பங்கள் உள்ளது. 75 லட்சம் வாக்காளர்கள் இருக்க மாட்டார்கள். அவர்களில் வீட்டுக்கு வீடு விஜய் இருப்பார்களா? என்பதும் தெரியாது. விஜய்க்கும் விஜய்க்கும் பூத் ஸ்லிப் உள்ளதா? பட்டியலில் பெயர் உள்ளதா? என்பது கேள்விக்குறிதான்.

வரைவு பட்டியலில் பெயர் இருந்தாலும், இறுதிப் பட்டியலில் பெயர் வருமா என்பது தெரியாது. இந்த தேர்தலில் தவெக வர வேண்டும் என்றால் வீராவேசமாக பேசினால் மட்டும் போதாது. எதார்த்ததில் உள்ள நிலையை உணர்ந்து அதற்கு கட்சியினரை தயார் செய்ய வேண்டும். அப்படி தயார் செய்வதற்கான தொடக்கப்புள்ளியாக 3ஆம் ஆண்டு தொடக்க விழா இருந்திருக்க வேண்டும். ஆனால் பள்ளி ஆண்டு விழா போன்று சிம்பிளாக முடித்துவிட்டார், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ