spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்விஜயவாடா சென்ற ரஜினிகாந்த்... ஏர்போட்டில் உற்சாக வரவேற்பளித்த பாலய்யா!

விஜயவாடா சென்ற ரஜினிகாந்த்… ஏர்போட்டில் உற்சாக வரவேற்பளித்த பாலய்யா!

-

- Advertisement -

விஜயவாடா சென்ற ரஜினிகாந்திற்கு பாலைய்யா உற்சாக வரவேற்பளித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ஆகவும் இந்திய சினிமாவின் பெரும் ஸ்டார் நடிகராகவும் வலம் வருகிறார் ரஜினிகாந்த். அவர் இந்தியாவில் எங்கு சென்றாலும் அதீத மரியாதை கொடுக்கப்படுகிறது என்றால் அவருடைய புகழ் என்னவென்று நாம் புரிந்து கொள்ளலாம்.

we-r-hiring

ரஜினி தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ஜெயலர் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை எடுத்து ‘ஜெய் பீம்‘ இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் நடிக்க உள்ளார். அந்தப் படத்தை அடுத்து மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் படத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்நிலையில் தெலுங்கில் பழம்பெரும் நடிகரான என்டி ராமராவ் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள ரஜினி விஜயவாடா சென்றுள்ளார். அங்கே விமான நிலையத்தில் என்டிஆரின் மகனும் பிரபல தெலுங்கு நடிகருமான பாலகிருஷ்ணா ரஜினிக்கு உற்சாக வரவேற்பு அளித்துள்ளார். அந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

 

MUST READ