Homeசெய்திகள்சினிமா”யூசுப்பாகவே வாழ்ந்திருக்கிறார்” – கஸ்தூரிராஜா நடிப்பை புகழ்ந்த தனுஷ்…

”யூசுப்பாகவே வாழ்ந்திருக்கிறார்” – கஸ்தூரிராஜா நடிப்பை புகழ்ந்த தனுஷ்…

-

- Advertisement -

இயக்குநர் மீரா கதிரவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஹபீபி’ திரைப்படத்தில் நடித்துள்ள தனது தந்தை கஸ்தூரிராஜாவை நடிகர் தனுஷ் மனம் திறந்து பாராட்டியுள்ளார்.”யூசுப்பாகவே வாழ்ந்திருக்கிறார்” – கஸ்தூரிராஜா நடிப்பை புகழ்ந்த தனுஷ்…

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவு சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது. அந்த பதிவில், ‘ஹபீபி’ திரைப்படத்தில் கஸ்தூரிராஜா ஏற்றுள்ள “யூசுப்” கதாபாத்திரம் குறித்து பெருமிதம் தெரிவித்துள்ளார். இதுவரை அறிமுகமில்லாத ஒரு புதிய உலகத்திற்குள் நுழைந்து, அந்தக் கதாபாத்திரமாகவே முழுமையாக வாழ்ந்திருப்பது தன்னை பெருமைப்பட வைப்பதாக தனுஷ் குறிப்பிட்டுள்ளார்.

we-r-hiring

மேலும், நடிகர்களிடமிருந்து சிறந்த நடிப்பை வெளிக்கொணர்ந்த இயக்குநர் மீரா கதிரவனை அவர் பாராட்டியுள்ளார். அதோடு, படக்குழுவினர் அனைவருக்கும் தனது வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார். தந்தையின் நடிப்பு குறித்து மகன் தனுஷ் வெளியிட்டுள்ள இந்த பாராட்டு பதிவு, ‘ஹபீபி’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. திரைப்பட ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்களும் இந்த பதிவை வரவேற்று வருகின்றனர். ‘ஹபீபி’ திரைப்படத்தில் கஸ்தூரிராஜாவின் நடிப்பு முக்கிய அம்சமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், படத்தின் வெளியீட்டை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி வருகின்றனர்.

நானியின் ‘தி பாரடைஸ்’ புதிய அப்டேட் இன்று மாலை வெளியீடு – ரசிகர்கள் உற்சாகம்

MUST READ