Homeசெய்திகள்சினிமாநானியின் ‘தி பாரடைஸ்’ புதிய அப்டேட் இன்று மாலை வெளியீடு - ரசிகர்கள் உற்சாகம்

நானியின் ‘தி பாரடைஸ்’ புதிய அப்டேட் இன்று மாலை வெளியீடு – ரசிகர்கள் உற்சாகம்

-

- Advertisement -

நடிகர் நானி நடிப்பில் இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கி வரும் ‘தி பாரடைஸ்’ திரைப்படத்தின் புதிய அப்டேட் இன்று மாலை 6.03 மணிக்கு வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. “#JadalZamana” என்ற ஹேஷ்டேக்குடன் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

நானியின் ‘தி பாரடைஸ்’ புதிய அப்டேட் இன்று மாலை வெளியீடு - ரசிகர்கள் உற்சாகம்

we-r-hiring

‘தசரா’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு நானி மற்றும் ஸ்ரீகாந்த் ஒடேலா கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால், இந்தப் படம் மீதான ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 1980-களின் செகந்திராபாத் நகரத்தை பின்னணியாகக் கொண்டு உருவாகும் இந்தப் படம், ஒடுக்கப்பட்ட சமூக மக்களின் உரிமைக்கான போராட்டத்தை மையமாகக் கொண்ட பீரியட் ஆக்சன் திரைப்படமாக உருவாகி வருகிறது.

படத்தில் நானி, ‘ஜாடல்’ என்ற கதாபாத்திரத்தில் வித்தியாசமான தோற்றத்தில் நடிக்கிறார். இதுவரை இல்லாத அளவுக்கு முரட்டுத்தனமான மற்றும் சக்திவாய்ந்த கதாபாத்திரமாக அவரது வேடம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நாயகியாக கயாடு லோஹர் நடிக்க, மூத்த நடிகர் மோகன் பாபு ‘ஷிகஞ்சா மாலிக்’ என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் ராகவ் ஜூயல், சோனாலி குல்கர்னி மற்றும் சம்பூர்ணேஷ் பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் இடம்பெற்றுள்ளனர்.

இந்தப் படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். எஸ்எல்வி சினிமாஸ் நிறுவனம் சார்பில் சுதாகர் செருகுரி பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்து வருகிறார். நானியின் திரைப்பயணத்தில் அதிக பட்ஜெட்டில் உருவாகும் படமாகவும் ‘தி பாரடைஸ்’ கருதப்படுகிறது. பான்-இந்தியா திரைப்படமாக பல மொழிகளில் வெளியாக உள்ள இந்தப் படத்தின் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. அண்மையில் வெளியான படத்தின் தீம் பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

படத்தின் தரத்தில் எந்த சமரசமும் இருக்கக்கூடாது என்பதற்காக சில காட்சிகள் மீண்டும் படமாக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், ‘தி பாரடைஸ்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 21, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

”புஷ்பா 2” விவகாரம் – நீதிமன்றத்தில் ஆஜராக நடிகர் அல்லு அர்ஜூனுக்கு சம்மன்…

MUST READ