Homeசெய்திகள்சினிமா”புஷ்பா 2” விவகாரம் - நீதிமன்றத்தில் ஆஜராக நடிகர் அல்லு அர்ஜூனுக்கு சம்மன்...

”புஷ்பா 2” விவகாரம் – நீதிமன்றத்தில் ஆஜராக நடிகர் அல்லு அர்ஜூனுக்கு சம்மன்…

-

- Advertisement -

புஷ்பா 2” திரைப்படத்தின் சிறப்புக் காட்சி வெளியீட்டின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பெண் ஒருவர் உயிரிழந்த வழக்கில், நடிகர் அல்லு அர்ஜூனுக்கு நாம்பள்ளி நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.”புஷ்பா 2” விவகாரம் - நீதிமன்றத்தில் ஆஜராக நடிகர் அல்லு அர்ஜூனுக்கு சம்மன்...

கடந்த 2024ஆம் ஆண்டு, ஹைதராபாத்தில் உள்ள ஒரு திரையரங்கில் “புஷ்பா 2” திரைப்படத்தின் சிறப்புக் காட்சியை காண நடிகர் அல்லு அர்ஜூன் நேரில் சென்றிருந்தார். அவரது வருகையால் திரையரங்கில் பெரும் திரளான ரசிகர்கள் கூடினர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி சேவதி என்ற பெண் உயிரிழந்தார். மேலும், அவரது மகன் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களின் பட்டியலில் நடிகர் அல்லு அர்ஜூனும் A-11 ஆக சேர்க்கப்பட்டுள்ளார்.

we-r-hiring

இந்த வழக்கின் தொடக்க கட்ட விசாரணையின்போது அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டு 14 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் நீதிமன்றம் வழங்கிய ஜாமினின் அடிப்படையில் அவர் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், வழக்கின் அடுத்த கட்ட விசாரணைக்காக நடிகர் அல்லு அர்ஜூன் நேரில் ஆஜராக வேண்டும் என்று நாம்பள்ளி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்காக அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ள நிலையில், வரும் ஜூன் 23ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நடிகை சஞ்சிதா உகலே மரணம்…தற்கொலைக்கு முன் நடந்தது என்ன? தந்தை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

MUST READ